என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
- யார்டுகள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்
- பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்
ஜோலார்பேட்டை:
சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளராக விஸ்வநாதன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள தனி ரெயில் மூலம் விஸ்வநாதன் ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வந்தார்.
அப்போது ரெயில் நிலைய மேலாளர் சேகர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே தொழிற்சங்க செயலாளர் எஸ். ஜெகன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சென்னை கோட்ட புதிய மேலாளருக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை கோட்ட பொது மேலாளர் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள், ரெயில்வே காவல் நிலையங்கள், முன்பதிவு அலுவலகங்கள், ரன்னிங் ரூம், ரெயில் நிலைய யார்டுகள் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் பிரிவு அலுவலர்களை தற்போதுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தப்பட உள்ள பணிகள் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது எஸ்.ஆர்.எம்.யூ. ஜோலார்பேட்டை பொறுப்பாளர் ஏ.டி.எஸ். கிளை செயலாளர் ஜெகன், ஓஎல் கிளை செயலாளர் செந்தில்குமார், எச்கீயூ கிளை செயலாளர் ஜெகன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






