என் மலர்
நீங்கள் தேடியது "2 bikes collide"
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 23).இவர் நேற்று மாலை வாணியம்பாடி பஜாருக்கு வந்தார்.
அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு மாத கடப்பா மலைக்கு, மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்.
மலைப்பகுதியில் இருந்து எதிரே தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 22), சீனிவாசன் (வயது 18), சக்திவேல் (வயது 19) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் வந்தனர். அப்போது 2
மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






