என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் சாரல் மழை
- முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் அவதிப்பட்டனர் மேலும் வீட்டிற்கு நனைந்தபடியே சென்றனர்.
மேலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள சிறு வியாபாரிகளுக்கு பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
மேலும் ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி மற்றும் ஏலகிரி மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இதனால் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் நிரம்பியது.
மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






