என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • போலீசார் இரவு ரோந்து பணியில் சிக்கியது
    • ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், டவுண் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவுதும்பேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தும்பேரி பாரதிநகர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த மூட்டை களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பின்னர் 24 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அம்பலூர் போலீசார் மேல் நடவடிக்கைக்காக வேலூர் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர்.

    Next Story
    ×