என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முகாம்
- அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு
- ஏலகிரி மலையில் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர், நிலாவூர், மங்கலம், தாயலூர் உள்ளிட்ட 14 கிராமங்களை கொண்டுள்ளது.
இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
மகளிர் தலைவிக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் படிவங்கள் வினியோகம் செய்யும் பணியை திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைப்பெற்று வருகிறது.
இதனை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.திருமால் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.






