என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மீது பைக் மோதி ஊழியர் சாவு
    X

    ஆட்டோ மீது பைக் மோதி ஊழியர் சாவு

    • விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40).

    இவருக்கு திருமணம் ஆகி, தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து அவரது மனைவி தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    சிவா சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை நோக்கி சிவா தனது பைக்கில் புறப்பட்டு சென்றார்.

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சென்ற போது, நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ பின்புறத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

    படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×