என் மலர்
திருப்பத்தூர்
- குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டேன் நானும் குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
- 3 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் 14 மாத கைக்குழந்தை மித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சிவக்குமார் (வயது30). டிராக்டர் ஓட்டி வருகிறார். இவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6, ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் அக்ஷரா (5), இலக்கியா (31/2), மித்ரா என்கின்ற வெண்டாமணி (14 மாத கைக்குழந்தை) இருந்தனர். கணவன் மனைவிக்கிடையே திருமணம் ஆன தொடக்கத்தில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சிவகுமாரின் தந்தை மற்றும் தாய் இறந்த பிறகு தகராறு அதிகமானது.
பீடி சுற்றும் தொழில் செய்து சத்யா தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சத்யாவுக்கும் சிவக்குமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் சத்யா கோபித்து கொண்டு முதல் மகள் அக்ஷராவை உடன் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் வீட்டில் தனியாக 2 குழந்தைகளுடன் சிவகுமார் தவித்து வந்தார். மன வருத்தத்தில் இருந்த அவர் குழந்தைகளை கவனிப்பதில் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 14 மாத குழந்தை மித்ரா பால் கேட்டு அழுதது. குழந்தையை சமாதானம் செய்ய முடியாத சிவகுமார் மித்ராவுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்தார்.
பின்னர் 2-வது குழந்தை இலக்கியாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்தார்.
இலக்கியா விஷம் கலந்த சாப்பாடை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்தது.
இதனை கண்டு பயந்து போன சிவகுமார் அவரது அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டேன் நானும் குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் உடனடியாக அங்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு 3 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் 14 மாத கைக்குழந்தை மித்ரா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிவகுமார் மற்றும் அவரது2-வது குழந்தை இலக்கியா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொருட்களின் தரம் குறித்தும் ேசாதனை
- ஆதார் மையத்தை பார்வையிட்டார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் ரேசன் கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள், நாட்டறம்பள்ளி கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியிலும் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் உணவினை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பதிவேடு, இ-ஆபிஸ் பணிகள், பட்டா மாற்றம், 23 வகையான சான் றிதழ் வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் குமார், சுமதி, வருவாய்த்துறை பணியாளர்கள், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.
- ெஜயிலில் அடைப்பு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் கோவில் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை சாலையில் நின்று வழி மறைத்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது போதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவரை கைது செய்து போலிஷ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணிய இவரது மகன் ராஜேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.
இதனையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாநில ஆதிதிராவிடர் நல குழு தலைவர் பேச்சு
- உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்ராகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் அனுமந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் வரவேற்றார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி. சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ. சம்பத்குமார், நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் என். கே. ஆர். சூர்யா குமார், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்செல்வி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுதல், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து பேசினர்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை தொகுதி பொறுப்பாளரும், மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைத் தலைவர் சா. ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மத்தியில் உள்ள மதவாத ஆட்சி தமிழகத்தில் காலூன்ற கூடாது. கலைஞருக்கு பிறகு இன்றைய சமூகநீதியின் சரித்திர நாயகன் இந்திய தேசம் போற்றுகின்ற வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
இதனால் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 66 பூத் கமிட்டிகளில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. நிர்வாகிகள் இதேபோன்று ஒன்றிணைந்து புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். திமுகவின் பலத்தை அதிகரிக்க வரும் 2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுகவிற்கும் திமுக தலைவருக்கும் இன்னும் பலத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
- திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகர திமுக சார்பில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்றபுதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார், அனைவரையும் கலிபுல்லா வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு இறைவன், திமுக நகர செயலாளரும் ஆவின் சேர்மன் எஸ்.ராஜேந்திரன், கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் படிவங்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நகராட்சி கவுன்சிலர் அபூபக்கர், நூர் பேக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஆய்வு
- பறக்கும் படையினர் கண்காணிப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 114 அரசு பள்ளிகளில் 7954 மாணவ, மாணவிகள், 30 அரசு நிதியுதவி பள்ளிகளில் 4721 மாணவ, மாணவிகள், 75 மெட்ரிக் பள்ளிகளில் 3734 மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் 844 மாணவ, மாணவிகள் என மொத்தம் 219 பள்ளிகளைச் சார்ந்த 17 ஆயிரத்து 253 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதில் 16,590 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினார்கள். 663 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தாாகள்குமார், (ச.பா.தி) சுமதி, வருவாயத்துறை பணியாளர்கள், தேர்வு மைய அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வடக்கு மண்டல ஐ.ஜி. தகவல்
- போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின்படி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிடித்த போலீசா ரையும், திருப்பத்தூர் காவல்துறை பல்பொருள் அங்காடியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இதனை யடுத்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பல்பொருள் அங்காடியை பார்வையிட்டு ஆய்வு செய்து திருப்பத்தூர் மாவட்ட காவலர்களுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும்.
பொருட்கள் இருப்பு இருப்பதற்கு முன்பு எப்போதும் அனைவருக்கும் தேவையான பொருட்கள் கிடைக்குமாறு கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு ஐ.ஜி. கண்ணன் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் ஆயுதப்படை மைதானத்தில் சுற்று பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள கம்பிகள் சுற்றப்பட்ட பேரிகார்டுகளை, கம்பிகள் அகற்றப்பட்டு அவற்றை சாலைகளில் பாதுகாப்பு கட்டமைப்புக்காக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனைத்து போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- கணவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் கருக்கம்பத்தூர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாசம் கூலி தொழிலாளி இவரது மனைவி காந்திமதி வயது (47).
இருவரும் தங்களது பைக் மூலம் வாணியம்பாடி தாலுகா புத்து முத்துமாரியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று மாலை வேலூர் நோக்கி இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த கன்னியாபுரம் தேசிய நெடுஞ்சாலை சென்று போது ஆம்பூரில் இருந்து வேலூர் நேக்கி சென்ற கனரக லாரி இவர்கள் ஓட்டிவந்த பைக் மீது ேமாதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட லாரியின் டயரில் காந்திமதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரகாசம் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காந்திமதியின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த பிரகாசம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ேமலும் மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட நாயனசெரு அடுத்த மலையடிவாரம் பகுதியில் ஸ்ரீ நொண்டி மாரியம்மன் கேவில் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை தாரை தப்பட்டையுடன் சாமி ஊர்வலம் முக்கிய வீதிகளில் வழியாக சென்று கோவில் வந்தடைந்தது.
அதன் பிறகு பக்தர்கள் தீ மிதித்தும், முதுகு தேர் இழுத்தல், கரகம் எடுத்தும், நெஞ்சின் மீது மஞ்சள் இடித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று இரவு வாணவேடிக்கையுடன் நடன நாட்டியாலயா நிகழ்ச்சி நடைபெற்றது. நாயனசெருவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாயனசெருவு மலையடிவார ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
- கண்டன கோஷங்களை எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என். கோபிநாதன் தலைமை வகித்தார். அனைவரையும் துணைத் தலைவர் ஜி. குணசேகர் வரவேற்றார். பொருளாளர் வி.மோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பக்தவச்சலம் தொடங்கி வைத்து பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ஜெயச்சந்திர ராஜா, மர்ம நபர்களால் கடலூரில் தாக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தாக்கப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம் முத்து குமார் போராட்ட குழு தலைவர் சபரிநாதன், உட்பட பல பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஷியாம் நன்றி கூறினர்.
- சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி இருந்ததால் நடவடிக்கை
- நாட்டறம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரு டைய 7 வயது மகள் மோனிகாவுக்கு நேற்று முன் தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோ தித்த டாக்டர்கள், காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சிறுமிக்கு கொடுப்பதற்காக மாத்தி ரையை உடைத்தபோது அதில் கம்பி இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த டாக்டரிடம் முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு மாத்திரை வழங் கினார். இதனை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் மற் றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் குமார் கூறுகையில்:-
வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருந்து கிடங்கில் இருந்து பாராசிட்டமல் மாத்திரைகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளது.
அதில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலுவை யில் இருந்த 24,023 மாத்திரைகளும் வேலூரில் உள்ள தமிழ் நாடு அரசு மருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மாத்திரைகள் தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 2-வது பிளாட்பாரத்தில் சென்னையிலிருந்து கோவை நோக்கி செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தடைந்தது. அப்போது பின்னால் பொது பெட்டியில் சுயநினைவு இல்லாமல் ஒருவர் மயங்கி கிடப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது 70 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழே இறக்கினர். ரெயில்வே மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






