என் மலர்tooltip icon

    தேனி

    • பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.
    • பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை - பொன்னன்படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னன்படுகை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது. எனவே பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதிக தொலைவு உடைய குமணன்தொழு சாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதே இடத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என உள்ளாட்சிகள் தினத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறத்தப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டர ங்கில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணிவெங்கடேசன் தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் ஜெயந்திமாயாண்டி முன்னி லை வகித்தார். எழுத்தர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பங்கேற்ற முத்துபாண்டி என்பவர் பேசும்போது, ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிதியை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் நானே அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றார். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதை ஊசி பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீ சார் அதிரடி சோதனை நடத்தி சுமார் 6 பேரை கைது செய்தனர்.

    ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி விற்பனை செய்யும் கும்பல் மதுரை, திருச்சி மாவட்ட ங்களில் இருந்து புரோக்க ர்கள் மூலம் இதனை சப்ளை செய்து வருகின்றனர். எனவே நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

    கிராமப்புறங்களில் போதை ஊசி பயன்படுத்து வோர் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மழைநீரில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.
    • மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்க ளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. மேலும் போடியில் இருந்து வெளியேறும் மழை உபரி நீர் கொட்டக்குடி ஆற்றின் வழியே வைகை ஆற்றுக்கு செல்கிறது.

    நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி பொதுப்பணித்து றை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் இது போடியில் திற்பரப்பு என்று அழைக்க ப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, போடி மெட்டு, பிச்சாங்கரைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.

    பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் குப்பைகள், மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அணைக்கட்டுப் பகுதிகளில் குவிந்து கிடப்பதால் நீர்வரத்து பகுதியில் உள்ள சிமெண்ட் தளங்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை இப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகு தியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றிய தொழிலாளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார்.
    • மாயமான தொழிலாளி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா(45). இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காட்டு ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் காட்டுராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • யூனியன் அலுவலக காவலாளி குடிபோதையில் தவறிவிழுந்து இறந்தார்.
    • மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணமாக வில்லை. ஆண்டிபட்டி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று இரவு பணிக்கு முருகன் வந்துள்ளார்.

    அங்கு சேர்மன் அலுவல கம் முன்பு குடிபோதையில் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்த போது முருகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. சார்பாக மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • போலீசார் தடுத்ததால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சியின் கொடி க்கம்பம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொட ர்ந்து மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்ப டும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்த லைவருமான ராஜ பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். கொடிக்கம்பம் நட அனுமதி இல்லாததால் அவர்களை போலீசார் கலைந்து போகுமாறு கூறினர்.

    அதற்கு எதிர்ப்பு தெரி வித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜ பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. வினரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 700 கனஅடியில் இருந்து அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்ய தொடங்கி யது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1101 கனஅடியாக உயர்ந்தது. நேற்று வரை அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. வைகை அணையின்நீர்ம ட்டம் 64.60 அடியாக உள்ளது. 769 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 106 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 9.2, கூடலூர் 16.2, உத்தம பாளையம் 16.6, சண்முகாநதி அணை 18.4, போடி 11.8, வைகைஅணை 3.8, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1, வீரபாண்டி 5, ஆண்டிபட்டி 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கோம்பை அருகே அமுல்நகரை சேர்ந்த அசோக்குமார்(23). 10-ம் வகுப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சகோதரி திருமண த்திற்காக ஊருக்கு வந்து ள்ளார்.

    மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த அசோக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
    • வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

    முகாமின் இறுதி நாளான நேற்று வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் ஆசிரியர் செல்வம் தலைமையில் போதை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது.
    • தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இதன்மூலம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனையடுத்து அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

    இன்றுமுதல் அடுத்தவருடம் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 45 நாட்களுக்கு 30 கனஅடிநீரும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கனஅடிநீரும், 60 நாட்களுக்கு 25 கனஅடிநீரும் என திறக்கப்பட உள்ளது.

    • ஆண்டிபட்டி பேரூராட்சியில் சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.
    • உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க உறுப்பினர்கள் 9, அ.தி.மு.க 6, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தலா ஒருவர் உள்ளனர்.

    தலைவராக சந்திரகலா என்பவரும், துணைத்தலைவராக ஜோதிசேகர் என்பவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் வரவில்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலர் தெரிவிக்கையில், பேரூராட்சியில் தங்கள் வார்டுக்குட்பட்ட பிரச்சினைகளை தலைவரிடம் தெரிவித்தாலும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    பெயருக்காக கூட்டம் நடத்தி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்க உள்ளோம் என்றனர்.

    மேலும் தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை செயல்அலுவலரிடம் வழங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

    • சின்னமனூர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை மகள் தரணி(19). இவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தரணியை தேடி வருகின்றனர்.

    தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருகிறார். இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கேதர்சுமார்(35) என்பவர் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×