சின்னமனூர் அருகே 2 பேர் மாயம்

சின்னமனூர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை மகள் தரணி(19). இவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தரணியை தேடி வருகின்றனர்.

தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருகிறார். இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கேதர்சுமார்(35) என்பவர் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com