தேவதானப்பட்டியில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றிய தொழிலாளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார்.மாயமான தொழிலாளி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா(45). இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காட்டு ராஜாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் காட்டுராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com