என் மலர்
தேனி
- வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.
- பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் பாண்டி(43). கூலித்தொ ழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக பெரியகுளம் முருகமலை புளியோடை பகுதியில் டேம் கட்டுவதற்காக காண்டிராக்ட் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பாண்டி தூக்கிவீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே பாண்டி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
- திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கவிதா(26). இவருக்கு 16 வயது இருக்கும் போதே கார்த்திக்(35) என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தில் இருந்தே கணவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்ப தேவைக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் அவரது நகைகளையும் பறித்து வைத்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து உத்தம பாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவிதா புகார் அளித்தார். அதன்பே ரில் கார்த்திக், அவரதுதந்தை சோனைமுத்து, தங்கை சோபனா(28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
கூடலூர், மார்ச்.29-
தேனி மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் கேரளாவின் ஒருசில மாவட்டங்களிலும் கோடைமழை பெய்து வருகிறது.
நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டி பட்டி, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதி களில் சுமார் 1 மணி நேரத்து க்கும் மேலாக கனமழை பெய்தது. அதன்பிறகும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
வடுகப்பட்டி, முதலக்க ம்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதா னப்பட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல் அடுத்துள்ள வட்டக்கானல், வெள்ளக்கவி பகுதியில் பெய்த கன மழை காரண மாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 72 கன அடி. திறப்பு 256 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடி. வரத்து 349 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2586 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 49.53 அடி. வரத்து 13 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 7, தேக்கடி 15.6, கூடலூர் 1, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1.2, வைகை அணை 30.2, மஞ்சளாறு 10, பெரியகுளம் 3, வீரபாண்டி 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது
- கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர்.
- மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை-போடி ரெயில் கடந்த மே மாதம் 27-ந்தேதி முதல் தேனி வரை இயக்கப்பட்டு வருகிறது. 15 கி.மீ தூரமுடைய போடி வழித்தடத்தில் தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆகவே போடி வரை ரெயிலை நீட்டித்து இயக்கு வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அங்கு நியமிக்கப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் நாளை போடிக்கு செல்ல உள்ளனர். இவர்களுடன் மற்ற அலுவலர்களும் செல்கின்றனர். இதற்காக தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கும், போடியில் இருந்து மாலை 5.30 மணிக்கும் தேனிக்கும் ரெயில்வே ஊழியர்களு க்கான சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
போடியில் ரெயில்நிலையம் டெர்மினல் தன்மை யுடன் இருப்பதால் அங்குள்ள கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர். பின்பு மாலை 5.30 மணிக்கு இதேரெயிலில் மதுரை கிளம்பி செல்கின்றனர்.
தண்டவாள ஆய்வு, சமிக்ஞை சோதனை, ஊழியர்களின் பணி ஒத்திகை போன்றவை அடுத்தடுத்து நடைபெறு வதால் மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
- இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலசொக்கநாதபுரம்:
தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் டி.ரெங்கநாதபுரம் மயானப்பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தேவாரம் மூணாண்டிபட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துவீரன் (வயது48) என்பவர் மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் விவசாய நீர் தேவை தற்போது இரண்டு மடங்காகியுள்ளது. எனவே பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. குறிப்பாக வைகை ஆறு நீர் பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் இன்று காலை முருக்கோடை கிராமம் வரை வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று பெய்த மழையின் காரணமாக இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் சாலைகளை மறைத்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.
- குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன.
- ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காண ப்பட்டது. பிறகு மாலையில் வெப்பம் தணிந்து மழை பெய்வதற்கான சூழல் காணப்பட்டது. மாவட்ட த்தின் பல பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று கம்பம் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நகரின் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள கழிவுநீரோடை நிரம்பி சாலையில் வழிந்தோடியது. இதேபோல கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கூரைகள், தகரங்கள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்திரா குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்க ப்பட்டது. இதையடுத்து ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- தேனியில் இருந்து ரெயில் என்ஜின் மட்டும் போடி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
- சிக்னல்கள் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து ரெயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி-மதுரை அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் தேனி-மதுரை இடையிலான ரெயில்சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவையை போடி வரை நீட்டிக்க பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் போடி-தேனி இடையே ரெயில்பாதையை ஆய்வு செய்து ரெயில் இயக்க அனுமதி வழங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ரெயில் சேவை தொடங்குவதாக அறிவிக்க ப்பட்டது.
இதற்கிடையே மதுரை ரெயில்நிலையத்தில் விரிவாக்க பணிகள் காரண மாக போடி-மதுரை ரெயில்சேவை ஒத்திவைக்க ப்பட்டது. இதையடுத்து கடந்த 23-ந்தேதி போடி-மதுரை இடையே ரெயில்பாதை அதிர்வுகள் குறித்து 3 பெட்டிகளுடன் கூடிய ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று தேனியில் இருந்து ரெயில் என்ஜின் மட்டும் போடி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதுரை-போடி ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளதால் தேனி-போடி வரையிலான நீட்டிக்கப்பட்ட ரெயில் பாதையில் சிக்னல்கள் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டதாக ரெயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மாசாணம்(77). இவரது மனைவி ராசாத்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதல் மாசாணமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படை ந்த அவர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(47). இவருக்கு கடந்த 2 வருடமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது காலில் உள்ள 2-வது விரலை வெட்டி எடுத்து விட்டனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
பெரியகுளம் கீழவட கரையை சேர்ந்த ஜெயபாண்டியன் மனைவி லிபியாரோஸ்(35). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
போடி நாகலாபுரத்தை சேர்ந்தவர் குருவய்யா(58). இவர் வயிற்றுவலி காரணமாக பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.
- போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கம்பம்:
தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டு கட்டப்பனை பகுதியை சேர்ந்தவர் பிஜேஷ் (வயது29). இவரது மனைவி அனுமோள் (27). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 18ந் தேதி தனது மனைவியை காணவில்லை என பிஜேஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் பிஜேஷ் திடீரென தலைமறைவானார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அனுமோளின் பெற்றோர் தனது மகளை தேடி வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டு வீட்டு கட்டிலுக்கு கீழே போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது கணவரை தீவிரமாக தேடி வந்தனர். குமுளி அருகே அவர் மறைந்திருப்பது தெரியவரவே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இது குறித்து பிஜேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவேன். இதனை தனது மனைவி கண்டித்தார். மேலும் மது குடித்தால் வீட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்தார். இருந்தபோதும் எனது மது பழக்கத்தை விடமுடியவில்லை. இதனால் போலீசில் என் மீது புகார் அளித்தார். போலீசார் என்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் என் மனைவியை தாக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை மறைத்து வைத்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் எடுத்து விற்று செலவு செய்தேன். பணம் தீர்ந்ததால் எனது நண்பர்களிடம் பணம் வாங்குவதற்காக குமுளிக்கு வந்தபோது போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர் என்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அருவிக்கு சீரான அளவு தண்ணீர் வருவதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிக்குமாறு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கொடைக்கானல், வெள்ள க்கவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையினால் கும்பக்கரை அருவியல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்க ப்பட்டது. தற்போது மழை குறைந்து அருவிக்கு சீரான அளவு தண்ணீர் வருகிறது. இதனைத் தொடர்ந்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிக்குமாறு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக உள்ளது. வரத்து 154 கன அடி. திறப்பு 256 கன அடி. இருப்பு 2033 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 54.04 அடி. வரத்து 164 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2565 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 48.05 அடி.
பெரியகுளம் 3.6, தேக்கடி 12.6, கூடலூர் 2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- பேரீட்சம் பழம் -1 கிலோ, நெய் -1/2 கிலோ, அமினோ அமிலம் ,விட்டமின் திரவம் -600 மி.லி, புரோட்டீன் பவுடர் -1 கிலோ, குடற்புழு நீக்கமாத்திரை-1, அளவுக் கோப்பை-1, துண்டு -1 ஆகிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
- தேனி மாவட்டத்தில் மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை போஷன் பக்வாடா இருவார ஊட்டச்சத்து நிகழ்வு நடைபெற்று வரு கிறது.
தேனி:
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் , ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தி ன்கீழ் கலெக்டர் ஷஜீவனா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவினை வழங்கி தொட ங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 0 மாதம் முதல் 6 மாதம் வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் 249 பயனாளிகளுக்கும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை உள்ள மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகம் வீதம் 304 பயனாளிகளுக்கும் மொத்தம் 553 பயனாளி களுக்கு, ரூ.2,000- மதிப்புள்ள 802 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.
ஊட்டச்சத்து பெட்டக ங்களில் பேரீட்சம் பழம் -1 கிலோ, நெய் -1/2 கிலோ, அமினோ அமிலம் ,விட்டமின் திரவம் -600 மி.லி, புரோட்டீன் பவுடர் -1 கிலோ, குடற்புழு நீக்கமாத்திரை-1, அளவுக் கோப்பை-1, துண்டு -1 ஆகிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1086 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு சுருவுகு வழங்கப்பட வுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவிக்க ப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை போஷன் பக்வாடா இருவார ஊட்டச்சத்து நிகழ்வு நடைபெற்று வரு கிறது.
தேனி மாவட்டத்தில் சிறுதானியங்களை மைய மாகக் கொண்டு, அனைத்து வயதினருக்கும் சிறுதானி யங்களை முன்னிலை ப்படுத்துதல் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை அனைத்துத்துறை அலு வலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.






