என் மலர்
தேனி
- சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் சுற்றி திரிந்த அவர் திடீரென மாயமானார்.
- சில்லமரத்துப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அவர் பிணமாக மிதந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி (வயது51). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் வளர்மதி சுற்றி திரிந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். சில்லமரத்துப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அவர் பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போடி தாலுகா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45). இவருக்கு அழகர்நாயக்கன்பட்டி சாலையில் தோட்டம் உள்ளது. அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தேனி:
தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது.
- முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழா நடை பெற்றது.
விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி வழங்கினார். வள்ளலார் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200 வது ஆண்டு தொடக்கமும், தருமச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து நினைவுகூறும் விதமாக முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.
இவ்விழாவில், இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 3 தொட்டிகளிலும் குறைந்த அளவிலான மழை நீர் மட்டுமே தேங்கிய நிலையில் பாசிகள் அதிக அளவில் படிந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் குடிநீர் தொட்டியில் நீர் அருந்துவதில்லை.
- கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வந்த 3 வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளது. இந்த மலையடிவாரத்தின் வழியாக தேனி-வருசநாடு பிரதான சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். வெயில் காலங்களில் மலைப்பகுதியில் இருக்கும் சிறு சிறு குளங்களில் நீர் வற்றி விடும். அதுபோன்ற நேரங்களில் மான்கள் குடிநீர் தேவைக்காக இரவில் மலையடி வார த்திற்கு வந்து சாலையை கடந்து அருகே இருக்கும் தோட்டப்பகுதிகளுக்குள் செல்வது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் போது சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி மான்கள் தொடர்ந்து பலியாகி வந்தது.
இதனை தடுக்க கடந்த 2019ம் ஆண்டு அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்களின் குடிநீர் தேவைக்காக 3 இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. மேலும் சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் மான்கள் பலியாவது கணிசமாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொ ட்டிகளில் வனத்துறையினர் முறையாக நீர் நிரப்பி வைக்கப்படுவதில்லை. இதனால் 3 தொட்டிகளிலும் குறைந்த அளவிலான மழை நீர் மட்டுமே தேங்கி காணப்படுகிறது. அந்த நீரிலும் பாசிகள் அதிக அளவில் படிந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் குடிநீர் தொட்டியில் நீர் அருந்துவதில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனால் மலைப்பகுதியில் இருந்து மான்கள் மீண்டும் குடிநீர் தேடி தோட்டப்பகுதிக்கு செல்ல தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வந்த 3 வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. தகவலறிந்த வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து அதன் உடலை அருகே இருந்த வனப்பகுதியில் புதைத்தனர்.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மான்கள் பலியாவதை தடுக்கும் வகையில் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து அதில் முழுமையாக நீர் நிரப்பி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் தம்பி இருந்து வந்துள்ளார்.
- தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி கிழக்கு ரதவீதியை சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜேஸ்க ண்ணன்(35). இவரது தம்பி இளவரசன் (வயது 30). இவர்கள் 2 பேரும் தங்கள் பூர்வீக நிலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால் இந்த தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் இளவரசன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜேஸ்கண்ணன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இளவரசன் தோட்டத்தில் தனக்கு மட்டுமே பங்கு உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் ராஜேஸ்கண்ணனை தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ்கண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர்.
- மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேல்மங்க லத்தை சேர்ந்தவர் வெற்றி வேல். இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனைத் தொடர்ந்து அவர் வடுகபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து வந்த வாலிபர்களிடம் விசாரித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர். இந்த தாக்கு தலில்ஜெகதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஜெகதீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியிலும், முத்துக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
இதில் 5 பேர் திருச்சியை சேர்ந்த ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனால் மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்து ஆடையை கிழித்து கற்பழிக்க முயன்றுள்ளார்
- பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள தங்கம்மாள்புரம் பொன்னகரை சேர்ந்தவர் பிச்சை என்ற பெருமாள் (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரின் 23 வயது மனைவியிடம் அடிக்கடி தவறான கண்ணோட்டத்தில் பேசி வந்துள்ளார். இதனை அவர் கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து இரட்டை அர்த்த முறையில் பேசியுள்ளார்.
சம்பவத்தன்று அவரது வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்து ஆடையை கிழித்து கற்பழிக்க முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிடவே அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
- வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 7 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், முடி காணிக்கை, உணவுகூடம் ஆகியவைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.
இதில் முடிகாணிக்கைக்கான ஏலத்தை மாயி என்பவர் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். ஆனால் கண்மலர் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.4 லட்சம், உணவு கூடத்தி ற்கான ஏலத்தொகை ரூ.19 லட்சம், ராட்டினம் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.1 கோடியே 50 லட்சம் என ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது.
இந்த ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரிய வர்கள் இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
- இடுக்கி மாவட்டத்தின் மொத்த அழகை கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.
கூடலூர்:
தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து 15வது மலர் கண்காட்சி குமுளி சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 44 நாட்கள் நடைபெறுகிறது.
மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில், வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும், இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் இடம்பெறுகிறது என்றார்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கட்டணமும், கண்காட்சியை காணவரும் மக்களுக்கு குட்டி விமானம் மூலம் குறைந்த கட்டணத்தில் இடுக்கி மாவட்டத்தின் மொத்த அழகை கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீசார் கேஸ் குடோன் ஓடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்களை மடக்கிபிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் கூடலூரை சேர்ந்த ஜெயமணி(63), காந்திமாலா(40) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
- சோதனை ஓட்டம் பதிவேடாக பதிவு செய்து அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சோதனை ஓட்ட த்தின் போது பயணிகளு க்கான வசதி, சிக்னல்கள் இயக்கம், ஊழியர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
தேனி - மதுரை இடையே அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போடி - தேனி இடையே 15 கி.மீ தூரத்துக்கு ரெயில் பாதை பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இந்த வழித்தடத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து ரெயில் பாதை அதிர்வு, சிக்னல்கள் செயல்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதன்படி தேனியில் இருந்து 12 பெட்டிகளுடன் இன்று சிறப்பு ரெயில் ஒத்திகைக்காக இயக்கப்பட்டது. இதற்காக மதுரையில் இருந்து தேனி வந்த ரெயில் இங்கிருந்து போடிக்கு சோதனைக்காக இயக்கப்பட்டது. தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் போடியில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் பயணம் செய்தனர். இந்த சோதனை ஓட்டம் பதிவேடாக பதிவு செய்து அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை ஓட்ட த்தின் போது பயணிகளு க்கான வசதி, சிக்னல்கள் இயக்கம், ஊழியர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் இந்த ரெயில் இன்று மாலை 5.30 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு தேனிக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் மதுரைக்கு பயணிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே சோதனை ஓட்டத்தின் போது பொது மக்கள் தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என ரெயில்வே துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். சோதனை ரெயிலில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர். இதனை ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களும் கைகளை காட்டி ரசித்தனர்.






