சொத்து தகராறு: அண்ணனை சரமாரியாக வெட்டிய தம்பி கைது!

தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் தம்பி இருந்து வந்துள்ளார். தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி கிழக்கு ரதவீதியை சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜேஸ்க ண்ணன்(35). இவரது தம்பி இளவரசன் (வயது 30). இவர்கள் 2 பேரும் தங்கள் பூர்வீக நிலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் இந்த தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் இளவரசன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜேஸ்கண்ணன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இளவரசன் தோட்டத்தில் தனக்கு மட்டுமே பங்கு உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் ராஜேஸ்கண்ணனை தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.

படுகாயம் அடைந்த ராஜேஸ்கண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com