என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற சம்பவம்: கடலைக்குண்டுவில் பரபரப்பு!
    X

    கோப்பு படம்.

    வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற சம்பவம்: கடலைக்குண்டுவில் பரபரப்பு!

    • வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்து ஆடையை கிழித்து கற்பழிக்க முயன்றுள்ளார்
    • பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள தங்கம்மாள்புரம் பொன்னகரை சேர்ந்தவர் பிச்சை என்ற பெருமாள் (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரின் 23 வயது மனைவியிடம் அடிக்கடி தவறான கண்ணோட்டத்தில் பேசி வந்துள்ளார். இதனை அவர் கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து இரட்டை அர்த்த முறையில் பேசியுள்ளார்.

    சம்பவத்தன்று அவரது வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்து ஆடையை கிழித்து கற்பழிக்க முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிடவே அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    Next Story
    ×