என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே மாயமானவர் பிணமாக மீட்பு
    X

    கோப்பு படம்.

    போடி அருகே மாயமானவர் பிணமாக மீட்பு

    • சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் சுற்றி திரிந்த அவர் திடீரென மாயமானார்.
    • சில்லமரத்துப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அவர் பிணமாக மிதந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி (வயது51). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் வளர்மதி சுற்றி திரிந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். சில்லமரத்துப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அவர் பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போடி தாலுகா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×