என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இருந்து பா.ஜ.க.வை ஓட ஓட விரட்ட வேண்டும்- அமைச்சர் பரபரப்பு பேச்சு
- பிரதமர் மோடி ஆசீர்வாதத்துடன் மந்திரி பதவி வகித்து வருகின்றனர்.
- தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு தமிழ்நாட்டில் நிற்கக்கூட தகுதி இல்லை.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா கட்சியை ஓட ஓட விரட்ட வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இந்த 3 பேரும் எப்படி எம்.பி. பதவிக்கு வந்தார்கள். மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று வெற்றி பெறவில்லை.
பிரதமர் மோடி ஆசீர்வாதத்துடன் மந்திரி பதவி வகித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவராவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு ஜெயிக்க வாய்ப்பு உள்ளதா? ஏனென்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க தைரியம் கிடையாது. தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு தமிழ்நாட்டில் நிற்கக்கூட தகுதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






