search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்?
    X

    அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்?

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருந்த போது அமித்ஷா சமரசம் செய்தார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சில வாரங்கள் அமைதியாக இருந்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிரடி கருத்துக்களை வெளியிட தொடங்கி உள்ளார். நேற்று அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பாரதிய ஜனதாவுடன் உள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி என்பது எல்லோரும் இணைந்ததுதான். பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது.

    இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், அண்ணாமலையை கண்டித்து பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் சில அ.தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.

    Next Story
    ×