என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியுபரம் 9-வது வீதியை சேர்ந்தவர் ராமானுஜர். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
சம்பவத்தன்று விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ஸ்ரீநிதி வீட்டின் மாடியில் உள்ள அறைக்குசென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் வசித்து வந்தவர் மகாலிங்கம் (வயது 75). ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மனைவி சுசீலா (65) ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற ராஜா (45) என்ற மகனும், உமா, சாந்தி என்ற மகள்களும் உண்டு. 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகாலிங்கத்துக்கு வள்ளியம்மாள் என்ற 2–வது மனைவியும் உண்டு. இவருக்கு குழந்தை இல்லை.
மகாலிங்கம் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். மகாலிங்கத்தின் மகள் உமா அருகில் உள்ள அரியக்குடி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து தனது தந்தையை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றார்.
அப்போது மகாலிங்கமும், அவருடைய மனைவி சுசீலாவும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உமா உடனடியாக தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த போது மகாலிங்கத்தின் 2–வது மனைவி வள்ளியம்மாள் வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கொலை நடந்தது அவருக்கு தெரியவில்லை.
போலீஸ் விசாரணையில், மகாலிங்கத்துக்கும், அவருடைய மகன் சந்தானத்துக்கும் சுமூக உறவு இல்லாமல் அவர்களிடையே தகராறு இருந்தது தெரிய வந்தது. மகாலிங்கம் நல்ல வசதியாக இருந்தபோதும் தனது மகனுக்கு பண உதவி ஏதும் செய்யாமல் ஒதுக்கி வைத்திருந்தாராம். சந்தானம் ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில தினங்களாக மகாலிங்கத்திடம் ஒத்திக்கு வீடு பார்க்க சந்தானம் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்க வில்லையாம்.
இது தொடர்பாக தந்தை– மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே இக்கொலையில் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையில் போலீசார் சந்தானத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே பள்ளத்தூர் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது இருவரும் முனுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
தீவிர விசாரணையில் 2 வாலிபர்களும் 2015-ல் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மொபட்டில் சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களான தேவகோட்டை கலிகுழியை சேர்ந்த பூமிநாதன் (33), மாத்தூர் செல்லத்துரை (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 7 பவுன் நகையை மீட்டனர். பின்னர் 2 வாலிபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் துபாய் காந்தி (வயது55). இவர் அருகில் உள்ள கிளாங்காட்டூரில் செங்கல் சேம்பர் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வேலையை முடித்து விட்டு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் துபாய் காந்தியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மானாமதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய துபாய் காந்தி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீபோல பரவியதால் பதட்டம் நிலவியது. கிளாங்காட்டூரில் உள்ள கருப்பணன் என்பவரின் வீட்டில் நேற்று இரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது. இதில் அவரது வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த கருப்பணன், முருகேசுவரி மற்றொரு கருப்பணன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் கிளாங்காட்டூரில் பதட்டம் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் அசம்பாவித சம்வங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
துபாய் காந்தியை வெட்டியது யார்? தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை வெட்டிய கும்பலே பெட்ரோல் குண்டு வீசி சென்றதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்புவனம்:
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தவதாரேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம். இவருடைய மனைவி அழகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளுடன் திருப்புவனம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற அழகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கணவன் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் அழகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
காளையார்கோவில் தாலுகா நந்தனூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது45). இவரது மகள் கஸ்தூரி (25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு செந்தில்குமார் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட் டார். கஸ்தூரி கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கஸ்தூரி, நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகங்கை சரக காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் வழக்குப்பதிவு செய்தார். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
திருப்புவனம் அருகே உள்ள பனிக்கனேந்தலை சேர்ந்தவர் செல்வம் (வயது45). இவர் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விவசாய வேளாண் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு வந்த செல்வம் விஷம் குடித்து அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அங்கு வந்த ஊழியர்கள் இது குறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்வம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் குறித்த பார்வையாளரும், கோ-ஆப் டெக்ஸ் நிறுவன இயக்குநருமான வெங்கடேஷ் தலைமையில் புதிதாக வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 2017 ஜனவரியில் 18 வயது பூர்த்தியாகும் புதிக வாக்காளர்கள் சேர்த்தல், ஏற்கனவே இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர் இருந்தால் நீக்குதல், இறந்து போனவர்களின் பெயர் நீக்குதல், இடம் விட்டு மாறும் வாக்காளர்கள் குறித்து விளக்கம் தரப்பட்டது. இதில் இதுவரை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளார்கள்.
இது தவிர ஆன்லையிலும் பதிவு செய்துள்ளார்கள். இந்த புதிய வாக்காளர்களை ஆய்வு பணி அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சியினரும் இதற்கு உதவிட வேண்டும். மேலும் புதிதாக வாக்காளர்கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தருமாறு கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர் அரவிந்தன், தேவகோட்டை சப்-கலெக்டர் வர்கிஸ், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ், தாசில்தார்கள் நாகநாதன், உமா, குமாரி, கண்ணன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே.எஸ்.மணிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், வக்கீல் இளையராசா, வட்டார காங்கிரஸ் தலைவர் சோனைமுத்து, பா.ஜ.க. முத்துக்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பெரோஸ்காந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள மேலமேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் செழியன் (வயது54). சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக இவர் மானாமதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த செழியன் திடீரென மாயமானார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் நாவலர் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து செழியனை தேடி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த வர் பிச்சையா (வயது 55). இவரது மகள் காஞ்சனா தேவி (16). இவர் கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசாமல் விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த காஞ்சனாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனாதேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பிச்சையா எஸ்.வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் உள்ள மதுரை ரோட்டை சேர்ந்த 17 வயதுடைய பெண் சருகணியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இந்த மாணவி வழக்கம்போல் வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவு 2 மணி அளவில் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து மாணவி தானாகவே எங்கேனும் என்றாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகர் அண்ணா சாலையை சேர்ந்தவர் தவமணி (வயது43). இவர் அரசு போக்குவரத்து பணிமனை டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்றார். நேற்று இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 39¾ தங்க நகைகளும், வீட்டில் இருந்த 10 கிலோ வெள்ளி சாமான்களும் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும்.
இது குறித்து தேவக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் தவமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
இன்று காலை கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






