என் மலர்

  செய்திகள்

  காரைக்குடியில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்
  X

  காரைக்குடியில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்குடியில் ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

  காரைக்குடி:

  காரைக்குடி அருகே பள்ளத்தூர் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது இருவரும் முனுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

  தீவிர விசாரணையில் 2 வாலிபர்களும் 2015-ல் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மொபட்டில் சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களான தேவகோட்டை கலிகுழியை சேர்ந்த பூமிநாதன் (33), மாத்தூர் செல்லத்துரை (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 7 பவுன் நகையை மீட்டனர். பின்னர் 2 வாலிபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  Next Story
  ×