என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தேவகோட்டை:

    முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தேவகோட்டை நகர செயளாலர் ராமசந்திரன் முன்னிலையில் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தர லிங்கம் தலைமையில், நகர செயலாளர் ராமசந் திரன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்தார்கள்.

    மகளிர் அணி உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க ஆண்டவர்செட்டில் இருந்து மவுன ஊர்வலமாக பேருந்து நிலையம் வரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    இந் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டார்கள்.

    சிவகங்கை மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்றதாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
    சிவகங்கை:

    ஜெயலலிதா மறைவை யொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் அதிரடி கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக பலர் மது விற்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் இருந்து 215 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்து 815 பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுத்தனமாக மது விற்றதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், லைசென்சு இல்லாமல் சென்றது போன்ற குற்றங்களின் கீழ் 371 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    காரைக்குடி அருகே வேன் வாங்கித் தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சுற்றுலா வேன் வாங்குவதற்காக காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த சரவண பாண்டி (வயது 36), திலகர் நகரைச் சேர்ந்த முகமது அப்துல் காதர் ஜெயினுலாதீன் (32) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் ஒரு சுற்றுலா வேனை காட்டி விற்பனைக்கு என்று கூறி ரூ.3¼ லட்சம் பணம் பெற்றுள்ளனர்.

    ஆனால் அவர்கள் வேனை ஒப்படைக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம். இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சரவணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் ஜெயினுலாதீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    செக் மோசடி வழக்கில் செல்போன் கடைக்காரருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து காரைக்குடி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 30). கோவிலூர் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர், முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரிடம், தனது தொழில் அபிவிருத்திக்காக ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். மேலும் வாங்கிய கடனை 6 மாத காலத்திற்குள் திருப்பி தருவதாகவும் அவர் கூறினார்.

    இதனையடுத்து 6 மாதம் முடிந்த பிறகு கிருஷ்ணன் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் வட்டியோடு சேர்த்து ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்திற்கான செக் ஒன்றை கொடுத்தார். குறிப்பிட்ட தேதியில் கிருஷ்ணன் செக்கை வங்கியில் செலுத்தியபோது, அதில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்டபோது அவர் பொறுப்பான பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.

    இதனால் கிருஷ்ணன் செக் மோசடி குறித்து காரைக்குடி விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் செக் மோசடி செய்த சீனிவாசனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 1 மாத காலத்திற்குள் கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு 3 மாதம் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
    ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல தமிழக அரசால் நபர் ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. இந்த பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான்நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த பயணம் வருகிற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணகாலம் 10 நாட்கள்.

    அதற்கான விண்ணப்பம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in"B "Bஎன்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபால்உறையில் ‘ஜெருசலேம் புனிதபயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807(5-வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 16.12.2016-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். நேரில் வரவேண்டியதில்லை.

    விண்ணப்பதாரர் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவராகவும், 1.1.2017-ந்தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட்டும் வைத்திருக்க வேண்டும். வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எவ்வித வில்லங்கமும் இருக்கக்கூடாது. மருத்துவ மற்றும் உடற்தகுதி இருக்க வேண்டும். அரசு தரும் நிதிஉதவி தவிர மீதம் உள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்கவேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் புனித பயணம் சென்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது.

    ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து 4 பேர் பயணம் செய்யலாம். இதில் 2 வயது குழந்தைகளும் இருக்கலாம். இந்த பயணத்தில் 70 வயது நிரம்பியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவர் விரும்பும் நபரும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் நபர்களின் பயணத்திற்கான காலம், பயணநிரல் பயணக்குழுவால் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரத்தில் மேகமூட்டம் காணப்படுகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரத்தில் மேகமூட்டம் காணப்படுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று காலை நடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது.

    புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை திருப்பத்தூர், திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவகங்கை 24, மானா மதுரை 21, இளையான்குடி 17.4, திருப்புவனம் 34.6, திருப்பத்தூர் 20, தேவ கோட்டை 17.3, காரைக்குடி 16.

    கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு மழை பெய்தது. ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்திலும் சில இடங்களில் அவ்வப்போது தூறல் மழை பெய்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மேகமூட்டம் காணப்படுகிறது.

    மதுரையில் நேற்று காலை தொடங்கிய சாரல் மழை இரவு வரை பெய்தது. இதனால் நகரில் பல் வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இன்று காலையும் சில இடங்களில் சாரல் மழை இருந்தது.

    மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பலியான மீன் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நஷ்டஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    தேவகோட்டை

    காரைக்குடியை சேர்ந்தவர் முருகன் மகன் ராமச்சந்திரன்(வயது 23). இவருடைய மனைவி மீனாட்சி. மீன் வியாபாரியான ராமச்சந்திரன், தனது வியாபாரத்திற்காக தினமும் காரைக்குடியில் இருந்து தேவிபட்டினம் கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி வருவது வழக்கம்.

    இவர் கடந்த 13–8–2012 அன்று அதிகாலை திருச்சி–ராமேசுவரம் சாலையில் மங்கலம் என்ற கிராமத்தின் அருகே வழக்கம்போல் தேவிப்பட்டினத்தில் மீன் வாங்கிக் கொண்டு காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ராமச்சந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு தேவகோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், விபத்தில் இறந்த ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.13 லட்சத்து 96 ஆயிரத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    சிவகங்கை அருகே மில்லுக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா ஒக்கூரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் அன்னத் தாய். இவரது மகள் ராதிகா (வயது33). திருமணமான இவர், மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராதிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆவரது தாய் மற்றும் உறவினர்கள் ராதிகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அன்னத்தாய் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை தேடி வருகிறார்.

    திருப்புவனம் அரசு பள்ளியில் அடிதடியில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செல்வப்பாண்டி, ஆங்கில ஆசிரியர் சரவணன் இருவரும் நேற்று முன் தினம் பள்ளியில் இறை வணக்க நிகழ்ச்சி முடிந்து செல்கையில் மாணவர்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்களிடமும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார்.

    இதே பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்புவனம் அரசு பள்ளியில் அடிதடியில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செல்வப்பாண்டி, ஆங்கில ஆசிரியர் சரவணன் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியில் இறை வணக்க நிகழ்ச்சி முடிந்து செல்கையில் மாணவர்கள் முன்னிலையில் அடி தடியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்களிடமும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதே பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் அருகே பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியிடம் அய்யப்ப மாலையை கழற்றக்கூறிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த திம்மணாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் பல்லவி (வயது 11) 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அவள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக அய்யப்ப மாலை அணிந்துள்ளாள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்லவி பள்ளிக்குச் சென்றுள்ளாள். வகுப்பறையில் பாடம் கற்பித்த ஆசிரியை, பல்லவியிடம் டாலருடன் இணைக்கப்பட்ட அய்யப்ப மாலையையும், தோளில் அணிந்திருந்த மேல்துண்டையும் கழற்றக்கூறியதாக தெரிகிறது.

    அத்துடன், மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசி, பல்லவியை வகுப்பறையில் இருந்து பாதியில் வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி மாணவி பல்லவி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடமும் கூறினார். ஆசிரியை மீது மாணவி தனது பெற்றோருடன் வந்து திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினியிடம் புகார் செய்தார். அதற்கு அவர், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இது குறித்து சம்மந்தபட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தபட்டது. விசாரணை அறிக்கை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மானாமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்திருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    மானாமதுரை:

    விருதுநகர்-திருச்சி பாசஞ்சர் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை போல் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிய பின் 8 மணிக்கு சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றது. மானாமதுரை வைகை ஆற்றுப் பாலத்தை கடந்து ரெயில் சென்றபோது திடீரென ரெயிலில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.

    இதை என்ஜினில் இருந்த ஊழியர்கள் உணர்ந்து, இதுகுறித்து உடனே மானாமதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே, ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அரை அடி நீளமுள்ள இரும்பு கம்பி ஒன்று தண்டவாளத்தின் இணைப்பில் செருகப்பட்டிருந்ததும், விருதுநகர் பாசஞ்சர் ரெயில் சென்ற வேகத்தில் அது உடைந்திருந்ததும் கண்டறியப்பட்டது.

    நல்ல வேளையாக பாசஞ்சர் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பிச்சென்று விட்டது.

    இந்நிலையில், காலை 8.40 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகங்கையை அடுத்த கொன்னக்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததால், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தபிறகு, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ரெயிலை இயக்கினால் பாதிப்பு இல்லை என கண்டறிந்த பின் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

    ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்த மர்மநபர்கள் யார், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
    ×