என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பனையம்பட்டி பகுதியில் மஞ்சு விரட்டு நடப்பதாக வாட்ஸ் அப்மூலம் தகவல் பரவியது.

    இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார், திருப்பத்தூர்- கண்டர மாணிக்கம் ரோடு, காட்டாம்பூர், தேவரம்பூர், பனையம்பட்டி, அரளிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பனையம் பட்டி தம்பை கண்மாய் பகுதியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக சுண்டக்காடு பிரவீன்குமார் (25), ஆறாவயல் பூவலிங்கம் (19), சிவரக்கோட்டையை சேர்ந்த 18 வயது வாலிபர், அய்யாபட்டி ஒய்யப்பன் (30), சுண்ணாம்பிருப்பு சேகர் (30), மணமேல்பட்டி செல்லப் பாண்டி (24), கார்த்திக் (25), ஜெயபாண்டி (24), பழனி குமார் (23) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காளையார்கோவில் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள அரியாக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, இவரது மகள் ஹேமா சருகனியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற ஹேமா வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து செல்லப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செய்யது அலி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி கடத்தப்பட்டாரா? என்று குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மானாமதுரையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர். சி.எஸ்., என்.எப்.ஐ.ஆர் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்றக் கோரி சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26 ஆயிரம், ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இதில் காரைக்குடிகிளை தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ஆதீஸ்வரன், பொருளாளர் அழகர், மானாமதுரை கிளைதலைவர் சகாதேவன், செயலாளர் தின்பிந்முர், பொருளாளர் மோகன், ஏ.டி.எஸ். அய்யப்பன் உள்பட ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை அருகே பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள சின்னப்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60), விவசாயி. இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கைக்கு வந்த தனியார் பஸ் ஆறு முகம் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    மதுரை தொழிலதிபர்களை தாக்கி ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    மதுரையை சேர்ந்த தொழிலதிபர்கள் முகம்மது ரபி, முஸ்ரக் ரகுமான். இவர்கள் மதுரையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். 2 பேரும் நேற்று இரவு காரில் ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை எடுத்து கொண்டு சிவகங்கை பகுதிக்கு சென்றனர்.

    நள்ளிரவு 11 மணி அளவில் இளையான்கடி செல்லும் வழியில் எதிரே 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இவர்கள் பயணம் செய்த காரை வழிமறித்து நிறுத்தியது. அவர்கள் 10 பேரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமது ரபி, முஸ்ரக் ரகுமான் ஆகிய 2 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை பறித்துக்கொண்டு காரில் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிவகங்கை டி.எஸ்.பி. மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.30 லட்சம் பணத்தை பறி கொடுத்த மதுரை தொழில் அதிபர்களுக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடக் கிறது.

    இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் வங்கிகளில் பொதுமக்கள் குவிந்ததால் பண பரிவர்த்தனைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஏ.டி.எம். மையங்களும் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    சிங்கம்புணரி:

    உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் போதிய பணமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 10, 11-ந்தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 12-ந்தேதி(திங்கட்கிழமை) வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் சிலருக்கு வங்கி பரிவர்த்தனை செய்ய முடிந்தது. இதனையடுத்து மறுநாள்(13-ந்தேதி) அரசு விடுமுறை காரணமாக வங்கிகள் அடைக்கப்பட்டன.

    இந்தநிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆனால் மக்களிடையே பண தட்டுப்பாடு காரணமாக அதிகாலையில் வங்கி திறப்பதற்கு முன்பே வாசலில் காத்து கிடந்தனர். மாவட்டம் முழுவதும் இதே நிலையே நீடித்தது. இந்த பணப்பிரச்சினையில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை மக்கள், ஓய்வூதியதாரர்கள், முதியவர்கள் தான் பெரிதும் அவதியடைகின்றனர்.

    ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பணப்பிரச்சினை சரியாகவில்லை. வங்கிகளில் தான் இந்த நிலைமை என்றால் ஏ.டி.எம். எந்திரங்கள் பணமில்லாத ஏ.டி.எம். மையங்களாக உள்ளன. கடந்த சில தினங்களாக இயங்கி வந்த ஒருசில ஏ.டி.எம். மையங்களும் நேற்று முடங்கி போயின. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் மேலும் தவிப்பிற்கு உள்ளானார்கள்.

    சிங்கம்புணரியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த வங்கியில் பணம் எடுக்கவும், போடவும் பொதுமக்கள் வங்கியின் உள்ளே குறைந்த அளவே அனுப்பப்பட்டனர். பிறகு வங்கியின் கேட் அதிகாரிகளால் பூட்டபட்டதால், மீதம் உள்ள பொதுமக்கள் வங்கி வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திறந்த வெளியில் காத்து நின்றதால் பொதுமக்களுக்கு சோர்வும், மயக்கமும் ஏற்பட்டது.

    இதுகுறித்து முருகன் என்பவர் கூறியதாவது:- சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக திறந்த வெளியில் வெயிலில் நின்று கொண்டிருக்கிறோம். நேரம் செல்ல செல்ல வங்கியில் பணம் இல்லை என்று சொல்வார்களோ என்ற அச்சத்துடன் நிற்க வேண்டி உள்ளது.

    வெயிலின் தாக்கமும் அதிகரிக்க மிகவும் சோர்வு ஏற்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் எடுக்கலாம் என்று பார்த்தால், அனைத்து ஏ.டி.எம். மையங்களும் பூட்டி கிடக்கின்றன. என்றைக்கு தான் தீருமோ இந்த பணப்பிரச்சினை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த வங்கியின் வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. 
    திருப்புவனம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அவனியாபுரம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கரிசல்குளம் கண்மாய். இந்த கண்மாயில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக புகார்கள் வந்தன.

    இதுகுறித்து சிலைமான் துணை தாசில்தார் பால கிருஷ்ணன், கரிசல்குளம் கிராம நிர்வாக அலுவலர் சேகர், கிராம உதவியாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் கண்மாய் பகுதிகளில் ரகசிய ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு 6 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் எடுத்து வருவது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டியில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக மக ராஜன், சின்னபாலு, வெற்றி வேல், போஸ் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் “வாட்ஸ் அப்” மூலம் மஞ்சு விரட்டு நடப்பதாக தகவல் பரப்பப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் மாடுகளுடன் ஏராளமானோர் குவிந்தனர்.மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார், பட்டமங்கலம் பகுதியில் மாடுகளை அவிழ்த்து விடாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் பலன் இல்லை.

    போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி ஆங்காங்கே ஒரு சில மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது.

    இதேபோல பக்கத்து கிராமங்களான வெளியாரி, கீழப்பட்டமங்கலம், மேலப்பட்டமங்கலம் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மஞ்சுவிரட்டு நடந்தது.

    இந்த நிலையில் திருக்கோஷ்டியூர் போலீசார் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்த முயன்றதாக வெளியாரியை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் பொன்னாங்குடியை சேர்ந்த மாயழகு(37) ஆகியோரை கைது செய்தனர்.

    திருப்புவனம் பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பெண்கள் குடத்துடன் வீதி வீதியாக அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்புவனம்:

    திருப்புவனம் பேரூராட்சியைச் சேர்ந்தது 16, 17 வது வார்டுகள் இந்த வார்டுகளுக்கு தண்ணீர் மோட்டார் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பெண்கள் குடத்துடன் கொளுத்தும் வெயிலில் அலைந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

    பேரூராட்சி அதிகாரியை பார்க்கச் சென்றால் அதிகாரிகளை பார்க்க முடியாமல் பெரும் அவதியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மோட்டாரை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என 16, 17-வது வார்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    திருப்புவனத்திலிருந்து மதுரைக்கு சுமார் 5 லட்சம் லிட்டரும், அருப்புக்கோட்டை பேரூராட்சிக்கு தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்புவனம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் 4 பேர் கத்திமுனையில் பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றனர்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புலியூரில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கீழடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், மணலூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர்.

    இவர்கள் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை அடைத்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    அப்போது அங்கு 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள், கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி விற்பனையாளர்களிடம் இருந்த ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 2 செல்போன்களை பறித்தனர். இந்த சம்பவத்தின் போது முத்துக்கிருஷ்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

    இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர் அருகே மாணவி அணிந்திருந்த அய்யப்ப மாலையை கழற்றும்படி கூறிய பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள திம்மணாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பல்லவி (வயது 11). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வகுப்பு ஆசிரியை மகேஷ்வரி (45), மாணவியிடம் அய்யப்பன் டாலர் மற்றும் இடுப்பில் உள்ள அய்யப்பன் துணியை கழற்றும்படி கூறியுள்ளார்.

    இதுகுறித்து பல்லவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பிரிய தர்ஷினியிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியை மகேஷ்வரியை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
    சிங்கம்புணரி அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம மனிதர்கள் திருடிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி, டிச. 9-


    சிங்கம்புணரி அருகே உள்ள புதூர் ஒன்றியத்திற் குட்பட்ட கட்டுகுடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது62), விவ சாயி. இவரது மனைவி லட்சுமி (53).

    இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சுப்பையா பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.

    அதன் பின்னர் லட்சுமி, ஆடுகளை மேய்ப்பதற்காக வயலுக்கு புறப்பட்டுள்ளார். வீட்டை பூட்டிய அவர், சாவியை வழக்கம்போல் ஒரு மறைவான இடத்தில் வைத்து சென்றுள்ளார்.

    இந்த சூழலில் சுப்பையா வீடு திரும்பி உள்ளார். கதவு திறந்து கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்,

    அப்போது பீரோவை யாரோ திறந்து அதில் இருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பது தெரியவர, சுப்பையா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசா ரணை நடத்தினர். வீட்டின் சாவியை லட்சுமி மறைவான இடத்தில் வைத்திருப்பதை நோட்டமிட்ட யாரோ, ஒரு வன், அதன் பிறகு அதனை எடுத்து வீட்டுக்குள் சென் றுள்ளான்.

    அங்கு பீரோவின் சாவி இருந்ததால் அதனை எடுத்து நகையை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதனை தேடி வருகின் றனர்.

    ×