என் மலர்
செய்திகள்

திருப்புவனம் அரசு அலுவலகத்தில் காவலாளி தற்கொலை
திருப்புவனம் அரசு அலுவலகத்தில் காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
திருப்புவனம் அருகே உள்ள பனிக்கனேந்தலை சேர்ந்தவர் செல்வம் (வயது45). இவர் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விவசாய வேளாண் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு வந்த செல்வம் விஷம் குடித்து அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அங்கு வந்த ஊழியர்கள் இது குறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்வம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
Next Story






