என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் 40 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
    X

    சிவகங்கையில் 40 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 40 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிறப்பு பார்வையாளர் தெரிவித்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் குறித்த பார்வையாளரும், கோ-ஆப் டெக்ஸ் நிறுவன இயக்குநருமான வெங்கடேஷ் தலைமையில் புதிதாக வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2017 ஜனவரியில் 18 வயது பூர்த்தியாகும் புதிக வாக்காளர்கள் சேர்த்தல், ஏற்கனவே இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர் இருந்தால் நீக்குதல், இறந்து போனவர்களின் பெயர் நீக்குதல், இடம் விட்டு மாறும் வாக்காளர்கள் குறித்து விளக்கம் தரப்பட்டது. இதில் இதுவரை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளார்கள்.

    இது தவிர ஆன்லையிலும் பதிவு செய்துள்ளார்கள். இந்த புதிய வாக்காளர்களை ஆய்வு பணி அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சியினரும் இதற்கு உதவிட வேண்டும். மேலும் புதிதாக வாக்காளர்கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தருமாறு கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர் அரவிந்தன், தேவகோட்டை சப்-கலெக்டர் வர்கிஸ், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ், தாசில்தார்கள் நாகநாதன், உமா, குமாரி, கண்ணன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே.எஸ்.மணிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், வக்கீல் இளையராசா, வட்டார காங்கிரஸ் தலைவர் சோனைமுத்து, பா.ஜ.க. முத்துக்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பெரோஸ்காந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×