என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி மாயம்
மானாமதுரையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள மேலமேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் செழியன் (வயது54). சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக இவர் மானாமதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த செழியன் திடீரென மாயமானார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் நாவலர் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து செழியனை தேடி வருகிறார்.
Next Story






