என் மலர்
செய்திகள்

காளையார்கோவிலில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
காளையார்கோவிலில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
காளையார்கோவில் தாலுகா நந்தனூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது45). இவரது மகள் கஸ்தூரி (25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு செந்தில்குமார் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட் டார். கஸ்தூரி கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கஸ்தூரி, நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகங்கை சரக காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் வழக்குப்பதிவு செய்தார். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






