என் மலர்
செய்திகள்

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
குழந்தைகளுடன் தாய் திடீரென மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
திருப்புவனம்:
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தவதாரேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம். இவருடைய மனைவி அழகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளுடன் திருப்புவனம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற அழகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கணவன் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் அழகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
Next Story






