என் மலர்
ராணிப்பேட்டை
- 500 பெண்கள் கலந்து கொண்டனர்
- கொட்டும் மழையிலும் நனைந்து பக்தர்கள் வழிபாடு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் 25 ம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு 9 நாள் ஆறுபடை முருகர் புனித யாத்திரை நிகழ்சி நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு திரவுபதி அம்மன் கோவிலில் ஸ்ரீ முருகர் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.
பின்னர் நேற்று இரவு மாந்தாங்கல் கிராமத்தின் அருகே இருக்கும் கன்னியம்மன் கோவிலில் இருந்து பம்பை மேல தாளத்துடன் மற்றும் வான வேடிக்கையுடன் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடத்தை தலையில் சுமந்தபடி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக நனைந்தபடியே கோவிலை வந்தடைந்தனர்.
கோவில் முழுவதும் ஊர்வலமாக சுற்றி வந்த பின்னர் கருவறையில் இருக்கும் முருகர் மற்றும் திரவுபதி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் இந்த ஒன்பது நாள் கொண்ட ஆறுபடை புனித யாத்திரையில் பங்கேற்ற ஊர் கிராம பொதுமக்கள் மாலை அணிவித்த பெண் பக்தர்கள் என ஏராளமான பக்தர்களுக்கு திரவுபதிஅம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 11 மணிக்கு ஆறுபடை புனித யாத்திரை புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாந்தாங்கல் மோட்டூர் ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தர்கள் விழாக் குழுவினர் பலர் செய்திருந்தனர்.
- மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பீதி
- பொதுமக்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட் அருகே முகுந்தராயபுரம் ஊராட்சியில் , நெல்லிக்குப் பம்மோட்டூர் செல்லும் சாலையில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் கம்ப மும் , நெல்லிக்குப்பம் மோட்டூர் சுடுகாடு அருகில் உள்ள டிரான்ஸ் பார்மர் கம்பமும் சேதமடைந்து உள்ளது .
அதேபோன்று நெல்லிக் குப்பம்மோட்டூர் செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் சேதம் அடைந்துள்ளது . இந்த வழியாக செல்பவர்கள் அச் சத்துடன் செல்ல வேண்டிய சூழ் நிலை உள்ளது .
சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்களையும் , நெல்லிகுப்பம் மோட்டூர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தையும் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
- முன்விரோதத்தால் விபரீதம்
- வாலிபர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை எல்.எப்.ரோடு காவக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மெக்கானிக். இவருக்கும் ஆத்துக்கால்வாய் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 12ந் தேதி நவல்பூர் கருமாரியம்மன் கோயில் அருகில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சதீஷ்குமார் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்ைசக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சதீஷ்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து சதீஷ்குமார் மனைவி மகாலட்சுமி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி மனைவியுடன் தகராறு
- போலீஸ் விசாரணை
நெமிலி:
நெமிலி அடுத்த பனப்பாக்கம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 47). இவர் சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மோகன் கடந்த சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தன் மனைவியிடம் தகாராறு ஏற்படுதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மீண்டும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த மனைவிஅதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கூட்டங்கள் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையம் இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் மனித கடத்தலுக்கான உலக எதிர்ப்பு தினம் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், குழு தலைவர் சதீஷ், ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக நிரோஷா, சமூக பணியாளர், பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சைல்டு லைன் அணித் தலைவர். சதீஷ்குமார் சைல்டு லைன் மூலம் வரும் அழைப்புகள் குறித்தும், ெரயில்வே ஜி.ஆர்.பி. ஆர்.பி.எப். மற்றும் இருப்புப் பாதை போலீஸ் நிலையம் மூலம் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்தும் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் விவரித்தனர்.
பின்பு மனித கடத்தலுக்கு எதிரான தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும், ஊடகங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுவது குறித்தும் மேற்படி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் கள பணியாளர்கள் பர்சானா, மேகலா, சுரேஷ், ஆர்த்திகா உள்பட இருப்புப் பாதை போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.45 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
- அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை கடந்த ஜீன் மாதம் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சர் காந்தியும், திமுக மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத்காந்தி ஆகியோர் பிஞ்சி ஏரியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நன்னீர் தேக்கம், தீவு, மலர் பூங்கா, சிறுவர் பூங்கா, நடைபயிற்சி மேடை, நவீன சுகாதார வளாகங்கள், பூங்காவில் நடவு செய்யப்படவுள்ள பலவகை மரக்கன்றுகள் குறித்து மாதிரி வடிவமைப்புடன் விளக்கினர்.
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் ரூ.45 கோடி செலவில் அமைக்கப்பட வுள்ள பூங்கா, சூரிய சக்தி மின் ஒளியுடன் உலக தரத்துடனான சுற்றுச்சூழல் பூங்காவாக இருக்கும் என்று கூறினர். சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை புணரமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ பூங்கொடி, திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பிஞ்சி ஏரியை புணரமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து முதற்கட்ட பணியை கொடியசைத்து அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பொறியாளர் ருத்ரக்கோட்டி, ஏரி புணரமைக்கும் திட்ட பொறியாளர் அருண், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா சுப்புராய தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் கீழ் புதுப்பேட்டையில் 15 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர் தரணி (48). குமாரின் பட்டாசு கடையில் தரணி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து தெருவில் நடைபெறும் திருவிழாவிற்காக கடையில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து தரணியின் மாடி வீட்டில் வைத்திருந்தார்.
இன்று காலை மாடியில் பட்டாசு வைத்திருப்பதை பார்த்த தரணியின் மகன் நிர்மல் (20) பட்டாசுகளை ஏன் மாடியில் வைத்துள்ளார்கள் என தந்தையிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நிர்மல் மாடியில் இருந்த பட்டாசுக்கு தீ வைத்தார். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நிர்மலுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் மாடியில் சுற்றுச்சுவர் இடிந்த்து விழுந்தது. பட்டாசு வெடிக்கும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகர மன்ற தலைவர் ஹரிணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- லைசென்ஸ் இல்லாமல் நடக்கும் கடைகள்
- உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார் நகரில் ஆற்காடு - ஆரணி சாலையில் ஒருவர் பானிபூரி விற்று வருகிறார்.
அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழந்தைக்கு ஊட்டினார். அப்போது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபோன்று அஜாக்கிரதையாக செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் நடத்தும் இதுபோன்ற பானிபூரி கடைகளை முற்றிலும் தடை செய்வதோடு அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தல்
- ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அ.ம.கிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர்கள் உமாமகேஸ்வரி, அமுதா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் க.சரவணன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, ஆன்ஸ், பான்பராக் போன்ற போதை பொருட்களை தடை செய்ய கோரி வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பாரத், ரவி, தேவேந்திரன், நகர செயலாளர்கள் கஜேந்திரன், ஞானசேகர், பாமக நிர்வாகிகள் கிரிகுமரன், செல்வம், கண்ணதாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- 11 முதல் 17-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்ற வேண்டும்
- நகர சபை கூட்டத்தில் தீர்மானம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வார்டு எண் 23 வண்டி மேட்டு சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் மேம்படுத்துதல் பணி செய்ய ரூ 40 லட்சம், 30 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தினக்கூலியாக ஆறு மாத கால ஊதியம் வழங்க ரூ.18 லட்சம் ஒதுக்குவது.
மேலும் நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் தங்கியிருந்த கட்டிடத்தை பழுது பார்த்து நினைவுச் சின்னம் ஆக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி கல்யாணராமன் அவர்களை கௌரவிக்கும் வகையில் எம் எஃப் சாலைக்கு தியாகி கல்யாணராமன் சாலை என பெயர் சூட்டுவது. என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் பேசியதாவது:-
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறோம்.
இதனால் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அரசாணை வந்துள்ளது. நமது நகரில் 12,502 வீடுகள் உள்ளது. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்ற வேண்டும். கொடி ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாலா பாராயணம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நெமிலி:
நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் ஆடிெவள்ளி திருவிழா ஸ்ரீ பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் நடைபெற்றது.
அவர் எழுதி கலைமாமணி பக்திப்பாடகர் வீரமணி பாடியுள்ள ஆடி வெள்ளிக்கிழமை என்ற இசைக்குறுந்த கட்டின் மறு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஆடிவெள்ளி சிறப்பு வழிபாட்டினை பாலாபீட நிர்வாகி மோகன்ஜி செய்தார்.
செயலர் முரளிதரன் வந்திருந்த ஆன்மிகப் ெபரியோர்களை வரவேற்றார் குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் பாலா பாராயணம் நடைபெற்றது. விழா நிறைவாக அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
- மாணவர்கள் கவிதை மற்றும் பாட்டு மூலம் விளக்கினர்
- அனைவருக்கும் எல்இடி பல்பு பரிசாக வழங்கப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மின்சார சிக்கனம் குறித்த மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோளிங்கர் செயற்பொறியாளர் ரமேஷ் வரவேற்றார். காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் நரசிம்மன் மற்றும் துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மண்டல செயற்பொறியாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சார சிக்கனம் மற்றும் மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும் விளக்கினார்.
இதில் பள்ளி மாணவர்கள் மின் சிக்கனத்தை குறிக்கும் விதமாக கவிதை மற்றும் பாட்டு மூலம் விளக்கினர். இதில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எல்இடி பல்பு பரிசாக வழங்கப்பட்டது.






