என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பானிபூரியில் அட்டைப்பூச்சி
    X

    பானிபூரியில் கிடந்த அட்டைப்பூச்சி.

    பானிபூரியில் அட்டைப்பூச்சி

    • லைசென்ஸ் இல்லாமல் நடக்கும் கடைகள்
    • உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார் நகரில் ஆற்காடு - ஆரணி சாலையில் ஒருவர் பானிபூரி விற்று வருகிறார்.

    அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழந்தைக்கு ஊட்டினார். அப்போது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோன்று அஜாக்கிரதையாக செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் நடத்தும் இதுபோன்ற பானிபூரி கடைகளை முற்றிலும் தடை செய்வதோடு அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×