என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெக்கானிக் அடித்து கொலை
- முன்விரோதத்தால் விபரீதம்
- வாலிபர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை எல்.எப்.ரோடு காவக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மெக்கானிக். இவருக்கும் ஆத்துக்கால்வாய் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 12ந் தேதி நவல்பூர் கருமாரியம்மன் கோயில் அருகில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சதீஷ்குமார் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்ைசக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சதீஷ்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து சதீஷ்குமார் மனைவி மகாலட்சுமி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






