என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் அமைக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா மாதிரி வரைப்படம்.
சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க பிஞ்சி ஏரி புணரமைக்கப்படுகிறது
- ரூ.45 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
- அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை கடந்த ஜீன் மாதம் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சர் காந்தியும், திமுக மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத்காந்தி ஆகியோர் பிஞ்சி ஏரியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நன்னீர் தேக்கம், தீவு, மலர் பூங்கா, சிறுவர் பூங்கா, நடைபயிற்சி மேடை, நவீன சுகாதார வளாகங்கள், பூங்காவில் நடவு செய்யப்படவுள்ள பலவகை மரக்கன்றுகள் குறித்து மாதிரி வடிவமைப்புடன் விளக்கினர்.
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் ரூ.45 கோடி செலவில் அமைக்கப்பட வுள்ள பூங்கா, சூரிய சக்தி மின் ஒளியுடன் உலக தரத்துடனான சுற்றுச்சூழல் பூங்காவாக இருக்கும் என்று கூறினர். சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை புணரமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ பூங்கொடி, திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பிஞ்சி ஏரியை புணரமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து முதற்கட்ட பணியை கொடியசைத்து அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பொறியாளர் ருத்ரக்கோட்டி, ஏரி புணரமைக்கும் திட்ட பொறியாளர் அருண், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






