என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தீபாவளி பலகாரம் செய்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் வடகால் கிராமம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 70).

    இவர் நேற்று தீபாவளி பண்டிகையில் வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மீது தவறி விழுந்தார்.

    இதில் முத்தம்மாள் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1¼ கிலோ கைப்பற்றினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் வசித்துவரும் ஆரோக்கியம் என்பவர் மகன் கிளிண்டன் என்கிற வினோத்குமார் (வயது 24). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்திருப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்.

    வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிளிண்டனை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு பாராட்டு
    • நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டங்கள் குறித்து பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி வரவேற்று பேசினார்.

    இதில் வாலாஜா வக்கீல்கள் சங்கத் தலைவர் இளங்கோவன்,வக்கீல்கள் ஸ்ரீதரன், விஜயகுமார், செந்தில் குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய சட்ட விளக்கங்களை அளித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திறமையான கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு நீதிபதி மகாசக்தி, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். முடிவில் சட்டப்பணி குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • ரூ.9 லட்சம் பறிமுதல்
    • 2 பேருக்கு வலைவீச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(40), பைனான்சியர். இவர் கடந்த 7-ந் தேதியன்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பைனான்ஸ் கலெக்சன் பணம் ரூ.15 லட்சத்துடன் தனது காரில் அம்மூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் கத்தாரிகுப்பம் கிராம வனத்துறை செக் போஸ்ட் அருகே கார் சென்ற போது பின்னால் வந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் 4 பேர் வேகமாக வந்து கையில் கத்தியுடன் சரவணன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து, கத்தியை காட்டி சரவணன் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் மர்ம நபர்கள் சென்ற கார் வயல் வெளியில் இறங்கி விட்டதால் காரை அங்கேயே விட்டு விட்டு 4பேரும் பணத்துடன் தப்பி விட்டனர்.

    சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    மர்ம நபர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின் பேரில் , போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் ,ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், சஞ்சீவிராயன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர் போன்ற பகுதிகளில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கார் உரிமையாளரிடம் , அவரது நண்பர்கள் வேலைக்காக காரை எடுத்து செல்வதாக கூறி எடுத்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று பொன்னை அடுத்த அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 2 வாலிபர்களை சிப்காட் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    அவர்கள் பெங்களூரை சேர்ந்த எல்லப்பா(28) சென்னவீரப்பா(22) என தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து எல்லப்பா, சென்னவீரப்பா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9லட்சத்து 40ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பூட்டுத்தாக்கில்‌ உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை
    • மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலை கலெக்டர் வளர்மதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலகுப்பம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், பள்ளி மற்றும் கல்லூரி ,வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் மேலகுப்பம் சாலை உள்ளது.

    சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது மேலகுப்பம் சாலையில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு மது அருந்துவதும், மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மது கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும், பா.ம.கவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதில் பா.ம.க.வின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வக்கீல். ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தற்கொலையா? போலீசார் விசாரணை
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி ஜங்ஷன் அருகே உள்ள பக்கிரிமலை பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர். மது அதிகமாக குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62), தனியார் பள்ளி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (51). இவர் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
    • தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் நகினாதபசூம். இவருக்கும் சையது முனவர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகினாதபசூம் ஜீவானம்சம் கேட்டு வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக நேற்று நகினா தபசூம் கோர்ட்டுக்கு வந்த போது அவரை, கணவர் சையத் முனவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோர்ட்டு வளாகத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக நகினா தபசூம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சையத் முனவர் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாரூக் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில், சோளிங்கர் சாலையில் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாலாஜா. மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா தலைமையில் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இது பற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர்,பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    பக்தர்கள் சிலர் கோவிலில் உண்டியல் இருப்பது தான் பிரச்சனை என்றால் அதனை அகற்றி விடுகிறோம் என கூறி சிமெண்டால் கட்டப்பட்டிருந்த உண்டியல் மேடையை இடித்து அகற்றினர்.

    கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கோவில் முன்பாக பக்தர்கள் கோஷமிட்டதாலும், பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கவே அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இடியுடன் கூடிய கனமழை
    • சிகிச்சை முடிந்து பத்திரமாக வீடு திரும்பினர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    அப்போது சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியபோது அவ்வழியே சென்ற 8-ம் வகுப்பு படிக்கும் கோதாவரி, 6 -ம் வகுப்பு படிக்கும் செல்வி, குருபிரசாத் ஆகியோர் கீழே விழுந்து மயக்கமடைந்தனர்.

    இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு சிகிச்சை முடிந்து 3 பேரும் பத்திரமாக வீடு திரும்பினர்.

    • போலீசில் புகார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சலீம்பாஷா(37). இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு , தனது செல்போனில் ஆபாச படம் காட்டி, பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. மேலும் சிறுமியிடம் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சலீம்பாஷாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்
    • கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய ஆதார் அட்டை பெற பள்ளி செல்லாமல் விடுப்பு எடுத்து நெமிலி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்து காத்து கிடந்தனர்.

    மேலும் ஆதார் அட்டை விண்ணப்பிக்க முடியாமல் பல மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இதனால் விரக்தியடைந்த பெற்றோர்கள் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.

    ×