என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு கேட்டு ஏராளமான மனுக்கள் வந்தது
    • மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கெண்டு குறைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 277 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் நாகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே அம்மன் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தரிசனம் முடிந்து கோவில் நடையை சாத்தி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • ஒரு சென்ட்டுக்கு ரூ.16 ஆயிரம் வழங்கியதாக புகார்
    • மார்க்கெட் மதிப்பு ரூ.40 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த 64 பேரின் நிலங்கள், சென்னை பெங்களூர் - விரைவு சாலை (எக்ஸ்பிரஸ் சாலை) அமைப்பதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது.

    அரசு வழங்கிய இழப்பீடு ஒரு சென்ட்டுக்கு ரூ.16 ஆயிரம். ஆனால் மார்க் கெட் மதிப்பு ரூ.40 ஆயிரம். ஆகவே தங்களுக்கு வழங்கிய இழப்பீடு போதவில்லை என்றும், மார்க்கெட் நிலவரப்படி பல மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நிலம் கொடுத்த விவசாயிகள் கடந்த 2018ம் ஆண்டு மனு கொடுத்தனர்.

    இந்த மனுக்கள் மீது துறைரீதியாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தர விட்டார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல்களும் பல் வேறு ஆவணங்கள் வழங்கி வாதாடினர். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 30-ம் தேதி யிட்ட கலெக்டரின் உத்த ரவில், சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு கோரியவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய் யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டரின் இந்த உத்தரவால், தங்களுக்கு அதிக இழப்பீடு கிடைக் கும் என்று காத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுதிரண்டு வந்த விவசாயிகள் புதிதாக மனு ஒன்றை அளித்தனர். அதில், வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கின்ற எங்களுக்கு, மனுதள்ளுபடி) அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. எனவே, இப்போது கொடுக்கும் மனுவை ஏற்று மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெற்று 8-ந் தேதி தமிழக கரையை கடக்கும்
    • புதுச்சேரிக்கு 3 படை குழுவினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைந்து சென்றனர்.

    அரக்கோணம்:

    அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெற்று 8-ந் தேதி தமிழக கரையை கடக்கும். அப்போது கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் இருந்து 6 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டத்திற்கு 25 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் சென்றனர்.

    மேலும் புதுச்சேரிக்கு 3 படை குழுவினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைந்து சென்றனர்.

    அங்கு அவர்கள் புயல் மழை எச்சரிக்கை முன்னேற்பாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின் பேட்டை தெரு, வெங்கட்ராய பிள்ளை தெரு, லிங்கா ரெட்டி தெரு ஆகிய 3 தெருக் களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. 3 தெருக்கள் முதல் பாட்டிக்குளம் வரை உள்ள சாலைகள் குறுகியதாக இருக்கிறது.

    இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாறி செல்ல சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது
    • பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடை மேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானி யங்கி நகரும் படிக்கட்டுகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே காட்சி பொருளாக வைத் துள்ளனர்.

    கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அபாயகரமான நிலையில் இருந்ததால் நடவடிக்கை
    • அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது.

    அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன், நகராட்சிதுணைத்த லைவர் கமல ராகவன், என்ஜினீயர் சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    இதையடுத்து வகுப்பறை கட்டிடம் அமைச்சர் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

    • பக்தர்களுக்கு பகவத் கீதை வழங்கப்பட்டது
    • பெருமாளுக்கு சிறப்பு தைலாபிஷேகம் நடந்தது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நேற்று கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு தைலாபிஷேகமும் நடைபெற்றது.

    கீதா ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் சென்னையை சேர்ந்த டாக்டர்.ரங்கராஜன் கலந்து கொண்டு, பீடாதிபதி. டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகங்களை வழங்கினார். 

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
    • தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக விடுவதாக மிரட்டி உள்ளார்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கின்ற பகுடு பாஸ்கரன் (33).

    இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது 2-வது மனைவிதுர்கா(30) என்பவருடன் வசிக்கிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசிக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து ஆற்காட்டில் குடியேறினார்.

    அந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

    இந்நிலையில், அந்த பெண்ணிடம் பாஸ்கரன். அவ்வப்போது வலியச் சென்று பேச்சு கொடுப்பாராம். ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    அந்தப் பெண்ணை எப்படியாவது அடைய வேண்டுமென பாஸ்கரன் காத்திருந்துள்ளார். மேலும் பாஸ்கரின் 2வது மனைவி துர்காவிற்கும் அந்த பெண்ணிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் தன்னிடம் அந்த பெண் அடிக்கடி தகராறு செய்து திட்டியதாக துர்கா கூறியுள்ளார்.

    இதனையடுத்து, அந்த பெண்ணை பழி வாங்க திட்டம் தீட்டிய பாஸ்கரன் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு தனது மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அப்போது கதவை திறந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி பாஸ்கரன் நுழைந்துள்ளார்.

    துர்கா வெளிப்புறமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே காவலுக்கு நின்று உள்ளார். பின்னர், பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கட்டி போட்டுள்ளார். மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் உடைகளை கழற்ற சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து மாணவியை அங்குள்ள கழிவறையில் தள்ளி கதவை பூட்டி உள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அவரையும் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். மறுநாள் அதிகாலை 3 மணி வரை இருவரையும் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த பகுடு பாஸ்கரன் அனைத்தையும் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களாக பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாகவும், எங்ருந்தாலும் தேடி வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

    மேலும், தொடர்ந்து பல முறை வீடியோவை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் அந்தப் பெண் இருந்துள்ளார்.

    தொடர்ந்து, பகுடு பாஸ்கரின் தொல்லை அதிகமானதால் மன வேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை புகார் செய்தார்.

    இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த பகடு பாஸ்கரன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆற்காடு-கண்ணமங்கலம் கூட்ரோடு உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த தம்பதிகள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 250 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீ சார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 25 கிலோ கொண்ட 10 மூட் டைகளில் சுமார் 250 கிலோ எடையிலான ரேசன் அரி சியை பறிமுதல் செய்து இருவ ரையும் கைது செய்தனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • 1,070 பேர் எழுதினர்

    ஆற்காடு:

    ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிராம உதவியாளருக்கான எழுத்து தேர்வில் 1070பேர் எழுதினர். இந்த தேர்வு மையத்தை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளையும் பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பாரதி, வி.ஏ.ஓ.சக்கரவர்த்தி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அம்மனூர் பகுதி சேர்ந்தவர் அருள் (வயது 32). இவர் நேற்று பழனி பேட்டை பகுதியில் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரக்கோணம் மதுரப்பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான்(34) என்பவர் அருளிடம் வந்து தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்றும் அதனால் உன்னுடைய செல்போனை தருமாறு அருளிடம் கேட்டார்.

    அதற்கு அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருளை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருளுக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து அருள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பட்டா கத்தி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×