என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி கடத்திய பெண்கள் கைது
- 250 கிலோ பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீ சார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 25 கிலோ கொண்ட 10 மூட் டைகளில் சுமார் 250 கிலோ எடையிலான ரேசன் அரி சியை பறிமுதல் செய்து இருவ ரையும் கைது செய்தனர்.
Next Story






