குறைதீர்வு நாள் கூட்டத்தில் 277 மனுக்கள் பெறப்பட்டது

குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு கேட்டு ஏராளமான மனுக்கள் வந்தது மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
குறைதீர்வு நாள் கூட்டத்தில் 277 மனுக்கள் பெறப்பட்டது
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கெண்டு குறைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 277 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com