என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    முன்மாதிரியாக திகழும் எங்கள் பள்ளிக்கு முதல்வர் வரவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலை பள்ளியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி அங்கிருந்து கடந்த 2019-ம் ஆண்டு பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார்.

    அங்கு, மக்கள் பங்களிப்பு, அரசின் திட்டங்களை பயன்படுத்தி அனைத்து வகுப்பறைகளிலும் தொங்குகூரை அமைத்தார். தரை தளங்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, ஏசி பொருத்தப்பட்டது. 

    விளையாட்டு கருவிகளுடன் கூடிய கலையரங்கம், விளையாட்டு கருவிகளுடன்கூடிய சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.  மேலும் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.


    இது குறித்து பச்சலூர் பள்ளி மாணவர்கள் கூறும் போது, எங்கள் பள்ளி கரும்பலகை இல்லாத அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஸ்மார்ட் பள்ளியாக செயல்படுகிறது. இந்த பள்ளியை முன்மதிரியாக கொண்டு பல்வேறு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

    அண்மையில் டெல்லிக்கு சென்று அங்குள்ள அரசு முன்மாதிரியை பார்வையிட்டு வந்துள்ள தமிழக முதல்வர், நம் மாநிலத்தின் முன்மாதிரி பள்ளியாக திகழும் எங்கள் பள்ளிக்கும் வரவேண்டும் என்றனர்.
    பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முள்ளங்குறிச்சி கணேசன் மனைவி சுசிலா(வயது 40), இவரது மகளுக்கும் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று 2 செல்போன்களின் வா ட்ஸ்-அப்களில் இருந்து ஆபாசமான வீடியோவும், போட்டோவும் சுசீலா செல்போனுக்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த எண்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 

    புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த சூர்யா என்று கூறியுள்ளார். இது குறித்து சுசீலா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்  ஹேமலதா வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை தேடிவருகின்றனர்.
    சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே ரெகுநாதபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட அழகன் விடுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தக வல் ெசன்றது. அதன்பேரில் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். 

    அப்போது மருதன்கோன்விடுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது47) சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த 43 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சாலையில் ஊற்றி அழித்தனர்.
    மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆசைஅப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

    வர்த்தகர் அணி நகர செயலாளர் சாகுல்ஹமீது  வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான், மாவட்ட துணை செயலாளர் லெட்சுமணன், தகவல் தொழில்நுட்ப அணி 

    மாவட்ட செயலாளர் முகமதுமன்சூர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாக கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை வழங்கினார்கள். மேலும் புதிய நகர பொருளாளராக அம்மன்ராமசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட , நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மருத்துவரணி நகர செயலாளர் சையதுஇப்ராஹீம்  நன்றியுரையாற்றினார்.

    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    அறத்தாங்கி தாலுகா அரசர்குலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசிமாதத் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவினையொட்டி தேரோட்டமும் நடைபெற்றது. 

    இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதி காப்புக் கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    தேரினை பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின்போது, ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    ஆலய வாசலில் உள்ள தேரடியிலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகளை சுற்றி வந்த பின்பு மீண்டும் தேரடியை அடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அறந்தாங்கி அருகே தொழிலதிபர் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 120 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 52). இவர் ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 24-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    மேலும் இவரது மனைவி ஆயிஷா பீவியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 170 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், ஆய்வு மேற்கொண்டு 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சைஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொழில்முனைவோர் யாரேனும்கூட தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர்.

    3 டி.எஸ்.பி.க்கள், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான இந்த தனிப்படை போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது 8 பேர் கும்பல் சிக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த கதிரவன், லோகேஷ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த், சூரியா, ஜெயப்பிரகாஷ், ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக் முகமது, நாகையை சேர்ந்த முகமது யூனுஸ், உசிலங்காட்டை சேர்ந்த ரதீஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த கும்பலிடம் இருந்து கொள்ளைபோன 170 பவுன் நகைகளில், 120 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவான ஒருவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.



    இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தேனீர் கடையில் மொய் விருந்து நடத்திய உரிமையாளர் ரூ.16 ஆயிரம் வசூல் செய்தார்.
    புதுக்கோட்டை:

    மொய் விருந்து என்றவுடன் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது புதுக்கோட்டை மாவட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம். கடன், தொழில் நஷ்டத்தால் தவிப்பவர்களை கைதூக்கி விடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    காலப்போக்கில் அதுவே பிரபலமாகி கோடிக்கணக்கில் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. தங்களின் தகுதிக்கேற்ப சாப்பிட்டுவிட்டு மொய் வைப்பதன் மூலம் விருந்து வைத்த குடும்பத்தினர் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் தன்னலம் கருதாமல் இலங்கை தமிழர்களின் நலன் கருதி டீக்கடைக்காரர் ஒருவர் மொய் விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    இலங்கையில் தற்கபோது கடும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் நிதி, நிவாரண உதவி வழங்க தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

    இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தனது கடையில், தேனீர் மொய் விருந்து நடத்தினார். இதில் வாடிக்கையாளர்கள் டீ அருந்தி விட்டு அந்த டீக்கு உரிய பணம் அல்லது தங்களால் முடிந்த நிதியை அங்கு வைத்திருந்த அண்டா வடிவிலான உண்டியலில் செலுத்தினர்.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அந்த டீக்கடைக்கு வந்து தங்களால் முடிந்த நிதிகளை உண்டியலில் செலுத்தினர்.

    இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், காலையில் இருந்து மாலை வரை 44 லிட்டர் பாலில் டீ வினியோகம் செய்யப்பட்டது. இந்த மொய் விருந்தில் மொத்தம் ரூ.16 ஆயிரத்து 202-ஐ நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து தமிழக அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்.

    தனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரை சந்தித்து அளிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டில் கஜா புயலால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது, தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் கடன் பாக்கி வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார்.

    அதன்பிறகு கொரோனா பரவல் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது டீ கடையில் மொய் விருந்து நடத்தி சேகரித்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.5 ஆயிரத்தை சேர்த்து கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுவருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பு மழைநீர் வடிகால் திட்ட பணியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், 

    ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், மற்றும்ஊ ராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    பயங்கர தீ விபத்து
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 17ம் வீதி பின்புறம் உள்ள தைலமரக்காட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயானது அதி–வேகமாக பரவ தொடங்கியது. 

    இதை பார்த்த அருகே இருந்தவர்கள் புதுக்கோட்டை தீயணைப்புதுறையினருக்கு தகவல்தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் காட்டுப்பகுதிக்குள் செல்ல பாதை இல்லாததால்தீயணைப்புத்துறை வீரர்கள் பொது–மக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் இணைந்து மரக் கிளைகளை உடைத்து பத்தி எரியும் தீயைமூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுப்படுத்தினர். 


    இந்த தீ விபத்தால் காமராஜபுரத்தின் ஒரு பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.
    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,இந்த தீ விபத்து தொடர்கதையாக உள்ள நிலையில் இதைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, தீ விபத்து ஏற்படும் பொழுது ஒவ்வொரு முறையும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

     இந்த காட்டுப் பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும்காட்டில் பற்றி எரியும் தீ குடியிருப்புகளில் பரவும்அபாயம் உள்ளது. 

    அவ்வப்போது தைல மர காட்டுப் பகுதியில் ஏற்படும் தீவிபத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்இந்த தைல மரத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் தமிழக அரசு தைல மரக் காட்டை அப்புற–ப்படுத்தி பல்லுயிர் காடுகளை வளர்க்க நடவடி–க்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
    மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே மேப்பூதகுடியில் 15 ஆண்டு–களுக்குப் பிறகு பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
    விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இங்கு கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக குளத்தில் நீர்நிரம்பி இருந்தது. அதனை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். 

    இந்நிலையில் குளத்தின் நீர் ஆனது தற்போது வற்றி–யதாலும் அறுவடைக் காலம் முடிந்தாலும் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவுசெய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

    அதன்படி இன்று காலை மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மீன்பிடி திருவிழாவானது நடைபெறுவதால் மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர். 

    இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க  இறங்கினர். 

    இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்துச் சென்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி காளியம்மனை வழிபட்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாந்தாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அக்கினி காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பால்குடம், காவடி, கரகம், மதுக்குடம் மற்றும் மதலை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரியான மாரிமுத்து என்பவர் பெண் வேடம் அணிந்து சாமி ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.

    அப்போது எரியும் கொள்ளிக்கட்டையை வாயில் வைத்து கடித்து அதிலிருந்த நெருப்புக்கங்கை விழுங்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் காலில் நெருப்பை தோய்த்தும், தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி காளியம்மனை வழிபட்டனர். முன்னதாக வாரத்தில் 3 தினங்களில் அருள் வாக்கு கூறுவதும், அது பக்தர்களுக்கு நிவர்த்தியடைவதால் அவர்கள் அம்மனுக்கு விரதமிருந்து காணிக்கை செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பாசன வசதி பெறும் வகையில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் கடைமடை பகுதியை தண்ணீர் வந்தடையும்.

    இந்நிலையில் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலன் கருதி முன் கூட்டியே மே 24-ந்தேதி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். 

    வழக்கமாக ஜுன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழ்நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட இருப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். 

    இந்நிலையில் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் இன்னும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

    இது குறித்து கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் கூறுகையில், கடந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிற சமையத்தில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கான டெண்டர் விடப்பட்டது. 

    அதனையடுத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இரண்டு, மூன்று தினங்களிலேயே தண்ணீர் வந்தடைந்தால் பணிகள் முழுமையாக நடைபெறாமல் போனது. இந்நிலையில் இந்தாண்டும் அதே போன்று தண்ணீர் திறந்து விட குறுகிய நாட்களே உள்ள நிலையில் இன்னும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் உள்ளது. 

    எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அதிகபடியான எந்திரங்களை கொண்டு, மேற்பனைக்காடு முதல் மும்பாலை வரை உள்ள தாய்வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

    ×