என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபருக்கு வலை
பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முள்ளங்குறிச்சி கணேசன் மனைவி சுசிலா(வயது 40), இவரது மகளுக்கும் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று 2 செல்போன்களின் வா ட்ஸ்-அப்களில் இருந்து ஆபாசமான வீடியோவும், போட்டோவும் சுசீலா செல்போனுக்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த எண்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,
புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த சூர்யா என்று கூறியுள்ளார். இது குறித்து சுசீலா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை தேடிவருகின்றனர்.
Next Story