என் மலர்
புதுக்கோட்டை
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்த வடிவேல் மகன் ரவிகுமார் (வயது 23). இவர் கடந்த சில தினங்களுக்கு மு ன்பு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
வேங்கிடகுலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்கா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரவிகுமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் (பொ) மற்றும் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயை தாக்கிய மகனை போலீசார் கைதுமகன் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே மேட்டுபட்டி உடையநோர் காலணியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி மகமாயி (வயது39). இவரது மகன் சிவா என்கிற சிவக்குமார் (21).
இவர் மது வாங்குவதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். அதற்கு மகமாயி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், மகமாயியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மகமாயி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குபதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தெத்துவாசல்பட்டி அருகே மஞ்சம்பேட்டையை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் அருவமணி(வயது15) பாலியியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருவமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.
மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.
கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.
தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.
கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.
தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.
பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்... குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
புதுக்கோட்டையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 27.05.2022 (வெள்ளிக் கிழமை) அன்று
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட
வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1431ற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் வெள்ளைச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பொன்பேத்தி சரகத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது. பின்பு பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது.
நேற்று பொன்பேத்தி சரகத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் முடிக்கப்பட்ட நிலையில், வரும்27 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முறையே மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோவில் ஆகிய சரகங்களில் உள்ள கிராம கணக்குகள் முடிக்கப்படவுள்ளது.
31-ந் தேதி அன்று மாலை குடிகள் மாநாடும் நடைபெறவுள்ளது.நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் வில்லியம்மோசஸ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மார்டின்லூதர்கிங்,
வேளாண்மை துறை உதவி இயக்குனர், துணை வட்டாட்சியர்கள், தோட்டக்கலை மற்றும் புள்ளியல்த்துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், நில அளவைத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நகர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் திலகவதி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைவர் திலகவதி பேசும்போது, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 242 புதிதாக மின்விளக்குகளும், 1034 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிக்கு குடிதண்ணீர் வினியோகிக்க அம்மையாப்பட்டியில் கூடுதல் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்குட்பட்ட 7 இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கப்படவுள்ளது. 3 இடங்களில் பொதுகழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடம் கட்டபடவுள்ளது என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.
வீட்டில் தூங்கிய தாய், மகளிடம் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்காடு ஊராட்சி மனப்புஞ்சை செட்டியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலா (வயது 55), மகள் தீபா (27), இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது,
வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கலா அணிந்திருந்த 11 பவுன் சங்கிலி, தீபா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். இச்சம்பவம் குறித்து வந்த வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டையில் மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில ஊனத் தடுப்பு மருத்துவ மறுவாழ்வு முகாம் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சார்பில் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சிவகாமி தலைமை தாங்கினார்.முகாமில் தொழு நோயினால் ஏற்படும் ஊனத்தை எவ்வாறு தடுப்பது, அதற்கான சிகிச்சை முறைகள்,
நோயாளிகளை எவ்வாறு கண்டறிவது, அவ்வாறு கண்டறிந்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சிகிச்சை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமாறன், மருத்துவர்கள் சசிவர்மன், கீர்த்தனா, மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர் மோசஸ்,
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், தர்மலிங்கம், நடேசன், இயன்முறை மருத்துவ நிபுணர் சிந்து மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சிக்கப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தனபாக்கியம் ( வயது 55). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் இன்று அதிகாலை ஆலங்குடி வடகாடு பிரதான சாலையில் குடிநீர் பிடித்து குடத்தை தூக்கிக்கொண்டு சாலையோரம் சென்ற போது
அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக தனபாக்கியம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வளர்ச்சித்திட்டப் பணிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.17.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, ஊரணி மேம்பாடு செய்யும் பணி, பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் பேசும் போது,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை வசதி,
குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை தேவகைளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, முடிவுற்ற பணிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தேர்வுநிலைப் பேரூராட்சியில் பொது நிதி திட்டம் 2021-22ன் கீழ் பேருந்து நிலையத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் கல்லுக்குண்டு ஊரணி ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவரங்குளம் ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் சார்பில் 100 சதவீத பங்களிப்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் ஊராட்சியின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மறமடக்கி ஊரணி, புதுக்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பில் புதுக்குளம் ஆகியவை புனரமைக்கப்பட உள்ள பணிகள், திருவரங்குளம் ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமையவுள்ள செட்டிகுளம்
உ
ள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.17.76 கோடி மதிப்பீட்டிலான பணிகள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா மே. 15-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அம்மன் வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் மாமன் ன், மைத்துனர் உறவின்முறைகாரர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர்.
தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆ ராதனைகள் நடைபெற்றன. பின்னர்,அம்மனை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே பக்தர்கள் வாகனத்தை இழுத்து வந்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீர்த்தம் தெளிக்கப்பட்டன.