என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புதுக்கோட்டை:


    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்.  மகள் மகாலட்சுமி (வயது 15). இவர் அப்பகுதியில் உள் ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், மாணவி சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் துடிதுடித்தார்.  இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

    அப்போது  அங்கு  பரிசோதனை செய்த டாக்டர்கள்,  மாணவி எலிபேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகு றித்து கீரமங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருேக உள்ள வடகாடு ஊராட்சிக்கு உட்பட்ட பூனைகுட்டிபட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பல லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இைதயொட்டி கோவில் வளாகத்தில் சிலதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் முழங்க புனித நீரு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியர்கள் வேதமந்திர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதனுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசினார்.
    புதுக்கோட்டை:

     குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசினார். 

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் செய்துணர் கற்றல் திட்டம் மூலம் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த 35 பேருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
     
    விழாவில்  கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது: 

    பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்.குழந்தைகளிடம் எதையும் திணிக்காதீர்கள்.குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யாதீர்கள் .குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவியுங்கள்.குழந்தைகளை போட்டித் தேர்வுகளுக்கு அனுப்பி வையுங்கள் என்றார். 

    விழாவில் 35 பேருக்கு ரூ 2 ஆயிரம் மதிப்பிலான பரிசுப்பொருள்கs; மாவட்ட முதன்மைக் கல்வி   அலுவலர் சாமி சத்தியமூர்த்தி  வழங்கி்ப் பாராட்டினார். முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடைபெற்ற வினாடி வினாப்போட்டியில் வகுப்பு வாரியாக சிறப்பிடம் பிடித்த பத்து பேர் வீதம்  மொத்தம் 40 பேருக்கு ரூ 2 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதுக்கோட்டையில் 2059 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2059 மாணவர்கள் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

     கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும்  மொத்தம் மாணவர்களில் 25 சதவீதம் பேர் கட்டணமின்றி சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான தொகையை அரசே செலுத்துகிறது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 21 தனியார் பள்ளிகளில் மொத்தம் 2059 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:

    மாவட்டத்தில் உள்ள 211 தனியார் பள்ளிகளில் சேர 3089 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 78 பள்ளிகளில் 695 மாணவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமிருந்த 133 பள்ளிகளில் குலுக்கல் முறையில் 1364 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் 211 பள்ளிகளில் 2059 மாணவர்கள்  தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். 880 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
    பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி வட்டத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் தொடங்கியது.

    புதன்கிழமை காரையூர், வியாழக்கிழமை அரசமலை, வெள்ளிக்கிழமை பொன்னமராவதி கணக்குகள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 173 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தியின் நிறைவாக மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது.

    குடிகள் மாநாட்டிற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமை வகித்து பயனாளிகள் 33 பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, பட்டாமாறுதல் ஆணை , சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.


    முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் வரவேற்றார். தனி வட்டாட்சியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


    கோடைகால கூடைப்பந்தாட்ட முகாம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 17 வது ஆண்டாக நடைபெற்று வரும் முகாமில், பள்ளி மாணவ மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

    கடந்த 16ம் தேதி தொடங்கிய முகாமானது, வருகின்ற ஜூன் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.காலை மாலை என இரு வேளை நடைபெற்று வருகின்ற பயிற்சியில் 115க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். இங்கு விளையாடுகின்ற மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு விடுதிக்கு, 10க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
     
    இந்நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடைப்பந்தாட்ட பயிற்றுனர் சண்முகபிரியன், அறந்தாங்கி கூடைப்பந்தாட்டக் கழக செயலாளர் குவிண்டன், 

    பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் மெய்யர், இணைச் செயலாளர்கள் சிவா,கிரண், பயிற்றுனர் காளிதாஸ் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    குடிநீரை உறிஞ்சிய மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை:


    ஆலங்குடி பேரூராட்சியில் அனுமதியின்றி மின்மோட்டார்களை வவைத்து குடிநீர் உறிஞ்சிய 10 மின் மோட்டார்களை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். 

    ஆலங்குடி பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் அனுமதியின்றி சிலர் மின்மோட்டார்களை வைத்து குடிநீறை உறிஞ்சி எடுப்பதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் 

    அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பல ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்டோர் மின்மோட்டாரை வைத்து குடிநீர் எடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    கீழவேகுப்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 7 பேர் காயமடைந்தனர். 

    கீழவேகுப்பட்டி ஏகானியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி பெரிய கண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 

    ஐநூறுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை  வாலிபர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடக்கி மகிழ்ந்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.
    பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கரூர்:

     கரூர் மாவட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    முதல் நாளில் திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மத்திய மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் எஸ்.சுனில்குமார் தலைமையில் 2வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

     எஸ்டீஎப்ஐ (இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு) பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான் கிறிஸ்துராஜ் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் ச.மோசஸ் போராட்ட விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் ஈரோடு ரா.மணி, நீலகிரி பெ.ஜெயசீலன், 

    நாமக்கல் ரா.மாதேஸ், திருப்பூர் அ.பிரஜெபாஸ்டியன், கோவை மாவட்ட துணை செயலாளர் ப.வீராச்சாமி ஆகியோர் போராட்ட உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.ஞானதம்பி போராட்ட நிறைவுரையாற்றினார். கரூர் மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி வரவேற்றார்.

    தொடர் உண்ணாவிரதத்தில், தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படு த்தும் விதமாக செயல்படும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.மதன்குமாரை கண்டித்தும், 

    கரூர்  மாவட்ட கல்வித்துறையில் அப்பட்டமாக விதிமீறலை கையாண்டு ஒன்றியம் விட்டு வேறு கல்வி  மாவட்டத்திற்கு பல கி.மீட்டர் தூரத்திற்கு பணி மாறுதல் ஆணைகளை வழங்கிய முதன்மைக்கல்வி  அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்  எனவும் வலியுறுத்தப்பட்டன.
    மோடி நினைத்தால்தான் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வரமுடியும் என்று எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:


    திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் போதிய அளவு கிடைக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. மின்சாரம் பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

    தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக  நடவடிக்கை எடுத்து மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் பிரிந்து சென்றதால் காங்கிரஸ் கீழ்ந்துவிடாது. காங்கிரஸ் கட்சி ஒரு பேரியக்கம் அதை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

    பிரதமருக்கு எந்த ஒரு மாநிலத்துக்கும், நாட்டுக்கும் செல்வதற்கு முழு அதிகாரம் உண்டு. அதன்படி தமிழகத்திற்கு வந்தார். பேரறிவாளன் விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கொள்கைகள் வேறு, வேறு, அது தெரிந்துதான் கூட்டணியில் உள்ளோம்.

    கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை. பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு வராமல் இருந்ததுதான் கட்சிக்கு லாபம். அவருடைய கணக்கு ஒருசில தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள்.

    சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவ்வளவு என்று ஆதாரங்களை இதுவரை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இத்தகைய சோதனை என்பது கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிதான். அவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டுவார்கள்.

    சசிகலா மட்டுமே அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவேன் என்று கூறி வருகிறார். ஆனால் ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சிக்குள் அவரை சேர்ப்பதாக தெரியவில்லை. ஒருவேளை மோடி மற்றும் அமித்ஷா நினைத்தால் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வரலாம். ஏனென்றால் இரட்டை தலைமையை முடிவு செய்தது மோடியும், அமித்ஷாவும்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புகையிலை பொருட்கள் விற்ற 9 பேைர போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

     
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் லாட்டரி மற்றும் குட்கா பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் அறிவுருத்தலின் பேரில், 

    பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில்  சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் ரகுராமன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது பெரியார்நகர் பகுதியில் 3 நம்பர் லாட்டரி மற்றும் சிங்கப்பூர் லாட்டரி விற்ற அதே பகுதியை சார்ந்த ரா.சுப்பையா(40), பி.கமர்தீன்(50),நெ.ஜெயராமன்(24) ஆகியோரை கைது செய்யத போலீசார், அவர்களிடமிருந்த பில் புக்,லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கம் ரூ 17,900 பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் மளிகைகடைகளில் சோதனை மேற்கொண்டபோது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கை.மாயாண்டி என்ற கண்ணன்(50), ஆறுமுகம்(43), கு.அடைக்கன்(36) மீனாட்சிசுந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

    தொடர்ந்து பொன்னமராவதியில் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டபோது அங்கு மொத்த விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்கள் ந.பாஸ்கர், சே.அப்துல்சலாம் ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர். குட்கா விற்ற 6 பேரிடமிருந்து  மொத்தம் 113 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஜமாபந்தி நடைபெற்றது. கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் 1,431 ஆம் பசலி ஆண்டு (ஜமாபந்தி) வருவாய்த், தீர்வாயம் நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்து கணக்குகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது:

     புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடப்பாண்டுக்கான வருவாய் கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதில் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், கறம்பக்கடி சரகத்திற்குட்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள், பார்வையிட்ட ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிமக்கள் பங்கு பெறும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இக்குடிகள் மாநாட்டில் மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.133695 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.

    ×