என் மலர்
புதுக்கோட்டை
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சியில் பாரதப்பறவை அமைப்பின் சார்பில் நேற்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பாரதப் பறவைகள் என்ற அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு 7 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கப்பட்டு தற்போது 140 இளைஞர் வரை இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு இளைஞராலும் மாதம் ரூ 100 வழங்கப்பட்டு, அது அமைப்பின் மூலம் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.ஒரு கட்டத்தில் பெருந்தொகையாக சேர்ந்த பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள், விதவைகள், பெற்றோர்களை இழந்து, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் மாணவ, மாணவியர்கள் போன்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் எரிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனா ளிகளுக்கான மூன்று சக்கர வண்டி, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மாணவர்களுக்கான மிதிவண்டி, பசுமாடு மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டது.
மேலும் பனைவிதை நடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்களும்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னதாக மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பாட்டம் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் திருவிழாவில் முன்னுரிமை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
வடகாடு அருகே மாங்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேரோட்ட திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியான காப்புக்கட்டு நிகழ்ச்சியின்போது தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி
அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்கள் வடகாடு பேப்பர் மில் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் பேச்சவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்காக இடத்தினை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், இப்பகுதி பொதுமக்கள் தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் கீதா சோலையப்பனிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது,
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் காமராஜர் நகர், முத்தமிழ்நகர், ராஜராஜன் நகர், மீனாட்சிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் மின் மயானம் அமைக்க அரசு அதிகராரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் பொதுவாக இறந்தவர்களை களை புதைக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருவதால் எங்களது பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டாம். உடனடியாக மின்மயானம் அமைக்கும் பணியினை கைவிடவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் தபால் நிலையம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வென்னிலாவின் கணவர் பாரதி கருப்பையா(43) பிளக்ஸ்போர்டு வைத்திருந்தார்.
இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பிளக்சை சேதப்படுத்தி தகாத வார்தைகளால் திட்டியுள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து பாரதி கருப்பையாகொடுத்த புகாரின்பேரில்கிருஷ்ணமூர்த்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்ட வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், பாரதி கருப்பையா மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க., போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டியும், 8 ஆண்டு கால சாதனை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையில்
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பா .ஜ.க.வின் சாதனை குறித்து விளக்கி பேசினர்.
இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பா.ஜ.க.வினரிடம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கவில்லை.
இதனால அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறினர். இதனால் பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவிழாவிற்கு அழைக்க வந்த கிராமத்தினருக்கு விருந்து கொடுத்து உபசரித்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
கீரமங்கலம் அருகே மாங்காடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மின்விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீற்றிருக்க பெண்கள் ஆரத்திக்குடங்களுடன் முன்னாள் செல்ல வாணவேடிக்கைகளுடன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை (சனிக்கிழமை) பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிலையில் பொங்கல் விழா மற்றும் தேரோட்ட திருவிழாவில் கொத்தமங்கலம் கிராமத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரு குடியிருப்பு மக்களுக்குமாங்காடு கிராமத்தின் சார்பில் நேரில் சென்று அழைப்பு கொடுப்பது வழக்கம்.
அதே போல நேற்று திருவிழாவிற்கு அழைப்பதற்காக சென்ற போது கொத்தமங்கலத்தில் வரவேற்பு கொடுத்ததுடன் அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்தனர். தொடர்ந்து 6-ந் தேதி தேரோட்டத்திற்கு கொத்தமங்கலத்திலிருந்து குதிரையில் சீர் கொண்டு செல்லும் நிகழ்வுகளும் நடக்க உள்ளது. திருவிழாவிற்கு அழைக்க வந்த கிராமத்தினருக்கு விருந்து கொடுத்து உபசரித்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அம்பேத்கர் நகரைச்சேர்ந்த இளையராஜா மகள் அபிநயா (வய து 15 ) இவர் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கடையில் பேனா வாங்கி வருவ தாக கூறிவிட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. உறவினர்கள், உட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், மாணவியின் தாயார் கோமதி
ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப் - இன்ஸ்பெக் கலைச்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது ஒன்றிய மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
கூட்டத்திற்கு நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். கொடியேற்றத்துடன் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில்ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு இயக்கப்பட வேண்டும், அமரடக்கியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும்,கருப்பூர் கிராமத்தில் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்,
இந்த ஆண்டு (2021-22) குலை நோய் மற்றும் புகையானால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்,
ஆவுடையார்கோவில் நான்கு கடை வீதியிலும் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கறம்பக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பள்ளத்தான்மனை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் நேற்று இரவு கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள உறவினரைபார்க்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் கறம்பக்குடி அருகே சொக்கன் தெரு என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகிறார்கள்.
மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்று திட்ட அலுவலர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
மனநலம் பாதிப்பால் ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி வெளிப்பாடு, நினைவாற்றல், கண்ணோட்டம், தீர்வுகாணும் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மனநலப் பிரச்சினைகள் பற்றிய அறியாமை மற்றும் தவறான எண்ணங்கள், நம்பிக்கைகள் காரணமாக மருத்துவ சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
ஒருவருக்கு மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அவரை தயங்காமல் மனநல மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த நவீன மருத்துவ சிகிச்சையின் மூலமாக மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடியும்.
தமிழக அரசின் மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக மனநலம், மனநலப் பிரச்சினைகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகள் பற்றிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரம்ப கட்டத்திலேயே மனநோைய கண்டறிந்தல், மன நோய்க்கான அவசரசிகிச்சை, தொடர் சிகிச்சை, உயர் சிகிச்சைக்கு பரிந்துரை முதலான சேவைகள் வழங்கப்படுகின்றன.
வாரந்தோறும் மனநல வியாழன் என்ற பெயரில் மனநல விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்படுகின்றன. புதுக்கோட்ைட மாவட்டத்தில் உள்ள த ாலுகா மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்றி மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது. எனவே மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி பயனடையலாம் என்றார்.
கந்தர்வகோட்டையில் மனநல விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
மனச்சிதைவு தினத்தை முன்னிட்டு ஸ்கார்ப்இந்தியா சார்பில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சபேட்டை கிராமத்தில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுமுகாமில் மனச்சிதைவு எதனால் ஏற்படுகின்றது. மனநலம் பாதிக்கப்படுவதை பற்றியும், தற்கொலை தடுப்பு பற்றிய நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யப்படும் சேவைகள் பற்றியும் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் அளிக்கப்படும் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
முகாமில் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் கவிதா வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனச்சிதைவு தினத்தை முன்னிட்டு ஸ்கார்ப்இந்தியா சார்பில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சபேட்டை கிராமத்தில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுமுகாமில் மனச்சிதைவு எதனால் ஏற்படுகின்றது. மனநலம் பாதிக்கப்படுவதை பற்றியும், தற்கொலை தடுப்பு பற்றிய நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யப்படும் சேவைகள் பற்றியும் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் அளிக்கப்படும் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
முகாமில் ஸ்கார்ப் இந்தியா பணியாளர்கள் கவிதா வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நல்லூர் வழைக்குறிச்சி நெறிஞ்சிக்குடி கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை கூட்டுறவு வங்யில் வைத்து விவசாய நகைக்கடன்கள் மற்றும் நகைக்கடன்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணன் என்பவர் அவரது மகளின் நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார்.இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த நகைகளை திருப்ப வந்துள்ளார். அவரது நகையை வங்கி ஊழியர்கள் சோதிக்கும்போது அங்கு அவரது நகை இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரது மகளின் திருமணம் தடைபடும் சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கி கொடுத்துள்ளனர்.
இதுபோன்று ஊர் பொதுமக்களின் நகையும் தொலைந்து போயிருக்கலாம் என்று கருதியவர் சமூக வலைதளங்களில் இக்கருத்தை பதிவிட்டு தங்களது நகை உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் சொல்லியுள்ளார்.
இதனால் பதட்டம் அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் தங்கள் நகைகளை காட்டுமாறு கூறியுள்ளனர். நகைகளை காட்ட வங்கி ஊழியர்களும் சிறிது அவகாசம் வேண்டும் என்றும்கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இச்சம்பவத்தால் நல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நல்லூர் வழைக்குறிச்சி நெறிஞ்சிக்குடி கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை கூட்டுறவு வங்யில் வைத்து விவசாய நகைக்கடன்கள் மற்றும் நகைக்கடன்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணன் என்பவர் அவரது மகளின் நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார்.இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த நகைகளை திருப்ப வந்துள்ளார். அவரது நகையை வங்கி ஊழியர்கள் சோதிக்கும்போது அங்கு அவரது நகை இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரது மகளின் திருமணம் தடைபடும் சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கி கொடுத்துள்ளனர்.
இதுபோன்று ஊர் பொதுமக்களின் நகையும் தொலைந்து போயிருக்கலாம் என்று கருதியவர் சமூக வலைதளங்களில் இக்கருத்தை பதிவிட்டு தங்களது நகை உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் சொல்லியுள்ளார்.
இதனால் பதட்டம் அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் தங்கள் நகைகளை காட்டுமாறு கூறியுள்ளனர். நகைகளை காட்ட வங்கி ஊழியர்களும் சிறிது அவகாசம் வேண்டும் என்றும்கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இச்சம்பவத்தால் நல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






