என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 30 பேர் மீது வழக்கு

    ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் தபால் நிலையம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வென்னிலாவின் கணவர் பாரதி கருப்பையா(43)   பிளக்ஸ்போர்டு வைத்திருந்தார். 

    இதனை பார்த்த  அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பிளக்சை சேதப்படுத்தி தகாத வார்தைகளால் திட்டியுள்ளதாக தெரிகிறது. 

    இச்சம்பவம் குறித்து பாரதி கருப்பையாகொடுத்த புகாரின்பேரில்கிருஷ்ணமூர்த்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்ட வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், பாரதி கருப்பையா மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×