என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்த காட்சி
மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்காக இடத்தினை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், இப்பகுதி பொதுமக்கள் தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் கீதா சோலையப்பனிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது,
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் காமராஜர் நகர், முத்தமிழ்நகர், ராஜராஜன் நகர், மீனாட்சிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் மின் மயானம் அமைக்க அரசு அதிகராரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் பொதுவாக இறந்தவர்களை களை புதைக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருவதால் எங்களது பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டாம். உடனடியாக மின்மயானம் அமைக்கும் பணியினை கைவிடவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
Next Story






