என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    file photo
    X
    file photo

    மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுக வேண்டும் - திட்ட அலுவலர் தகவல்

    மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்று திட்ட அலுவலர் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:


    உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும்  அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:
    மனநலம் பாதிப்பால் ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி வெளிப்பாடு, நினைவாற்றல், கண்ணோட்டம், தீர்வுகாணும் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.  மனநலப் பிரச்சினைகள் பற்றிய அறியாமை மற்றும் தவறான எண்ணங்கள், நம்பிக்கைகள் காரணமாக  மருத்துவ சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    ஒருவருக்கு மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அவரை தயங்காமல் மனநல மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த நவீன மருத்துவ சிகிச்சையின் மூலமாக மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடியும்.

    தமிழக அரசின் மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக மனநலம், மனநலப் பிரச்சினைகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகள் பற்றிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரம்ப கட்டத்திலேயே மனநோைய கண்டறிந்தல், மன நோய்க்கான அவசரசிகிச்சை, தொடர் சிகிச்சை, உயர் சிகிச்சைக்கு பரிந்துரை முதலான சேவைகள் வழங்கப்படுகின்றன.

    வாரந்தோறும் மனநல வியாழன் என்ற பெயரில் மனநல விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்படுகின்றன. புதுக்கோட்ைட மாவட்டத்தில் உள்ள த ாலுகா மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. 

    புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்றி மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது. எனவே மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற அருகில் உள்ள  அரசு மருத்துவமனையை அணுகி பயனடையலாம் என்றார்.
    Next Story
    ×