என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீனிவயலை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சீனிவயலில் இருந்து திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ரெங்கராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்புலன்சு ஊழியர் கண்ணன் என்பவரும் லேசான காயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரான சேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வல்லத்திராகோட்டை, வம்பன், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனி இடங்க ளிலும், தென்ன தோப்புகளில் ஊடுபயிராகவும் சுமார் 1000 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சம்பழங்கள் கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மண்டிகள் மலம் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பழம் சுமார் ரூ.20வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் சுமார் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது,
குளிர்பானம், ஊறுகாய் தயாரிக்கவும், சோப்பு உள்ளிட் டவற்றுக்கு தேவையான பவுடர் தயாரிக்கவும் எலுமிச்சம் பழங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கரில் சுமார் 500 கிலோ அளவுக்கு எலுமிச்சம் பழம் விளைகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியுள்ளதாலும் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கிலோ சுமார் ரூ.20க்கு கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே பா.ஜ.க போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர்,
மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்.
கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது.
அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது :
நகரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் கனவுத் திட்டமாக உள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞசப்பை இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் தூய்மையான பசுமையான, விலங்கினங்கள் வாழத் தகுதியான மாநிலமாக மாற்றப்படும்.
தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் துறை சர்பில் ஆயிரத்து 180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 172 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தீன் பைகள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் தேங்கும் 143 கிடங்குகள் கண்டறியப்பட்டு ஓராண்டில் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும். வரும் காலங்களில் குப்பைகள் எங்கு சேகரிக்கப்படுகிறதோ அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்ககூடிய திட்டம் தொடங்கப்படும்.
ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள்ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் நிறைவுபெறும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.






