என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கறம்பக்காடு ஜெமீன் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவாநந்தம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜீவா கடந்த மாதம் 23- ந்தேதி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ஜீவாநந்தம் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஜீவாவை தீவைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது கணவர் ஜீவாநந்தத்தை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். இதில் வரதட்சணை கேட்டு ஜீவாவை தீ வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் அவரை புதுக்கோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜீவா நந்தத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜீவாநந்தத்துக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அவரது பாட்டியின் பராமரிப்பில் உள்ளது.
திருச்சி:
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மாலை வழக்கம்போல் 6.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. கீரனூர் அருகே சென்ற போது ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடி யாக ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் மாற்று என்ஜின் கொண்டு வரமுடியாததால் தொடர்ந்து ரெயிலை மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கி புதுக்கோட் டைக்கு கொண்டு சென்றார்.
இதனால் வழக்கமாக புதுக்கோட்டைக்கு இரவு 7.40–க்கு சென்றடைய வேண்டிய பயணிகள் ரெயில் இரவு 8.40 மணிக்கு சென்றது. அங்கு பழுதான ரெயில் என்ஜினை சரி செய்யும் வகையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரெயில் என்ஜின் பழுது சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10.45 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த தாமதம் காரணமாக ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(வயது 32). இவர் தனது நண்பர்கள் ராஜா(36), வெற்றிச்செல்வன்(46), நாகராஜன்(55), ராஜேந்திரன்(38) ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் சென்றார்.
அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் நேற்று மதியம் அதே காரில் புறப்பட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை வெற்றிச்செல்வன் ஓட்டினார். நார்த்தாமலையை அடுத்த நக்கீரர்வயல் அருகே சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று சாலையில் விழுந்து 3 முறை உருண்ட பின்னர் நேராக நின்றது. இதில் காரில் இருந்த 5 பேரும் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த ராஜா, வெற்றிச்செல்வன், நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த அமிர்தராஜ், ராஜேந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அமிர்தராஜ் பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை தாசில்தாரும், தேர்தல் துணை அதிகாரியுமான சாலை தவவளன், பறக்கும் படை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் மங்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் பெரம்பலூர் பெருமாள்கோவில் வீதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 42) என்பதும் அரிசி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அரிசி வாங்குவதற்காக அவர் பட்டுக்கோட்டை உதய சூரியபுரத்திற்கு லோடு ஆட்டோவில் சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர் ரூ.3 லட்சம் பணம் வைத்திருந்தார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கந்தவர்க்கோட்டை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 பறக்கும்படையினர் மற்றும் 18 நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொகுதி பறக்கும் படை தாசில்தார் நாகராஜ் தலைமையில் பறக்கும்படையினர் அங்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். அதில் அந்த பாரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு அங்கிருந்த ஊழியர் பாஸ்கரை கைது செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளிலும் சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை தாசில்தார் நாகராஜ் புகார் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஜமாத் கூட்டமைப்பு தலைவர் லியாக்கத் அலி தலைமை தாங்கினார். செயலாளர் நூர்முகமது முன்னிலை வகித்தார்.
மருத்துவ முகாமில் ரத்தத்தில் சக்கரை அளவு, எழும்பின் உறுதி தன்மை, நுரையிரல் செயல்திறன் என்பது உள்பட பல்வேறு பரிசோதனைகளும், உடற்பயிற்சி ஆலோசனை உள்பட பல்வேறு மருத்துவ ஆலாசனைகள் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றனர். இதில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆலங்குடி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆலங்குடி வட்டம், பாத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வன்னியன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அறந்தாங்கி வட்டம், மறமடக்கி, கரிசக்காடு மற்றும் சுனையக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
புகார் பதிவேடு, தேர்தல் பொருட்கள் இருப்பு பதிவேடு, கடித உறை இருப்பு பதிவேடு போன்ற பல்வேறு தேர்தல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பணிகள் பார்வையிட்டும், வாக்காளர் சேவை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை பார்வையிட்டும், ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தும், வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டியும், கல்லாலங்குடி கிராம அங்காடியில் அனைத்து குடும்ப அட்டைகளிலும் மே 16 நடைபெறும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், குளவாய் பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவின் போது 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாரதி, உதவி ஆணையர் (கலால்) மற்றும் பயிற்சி அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெங்கராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வளர்ச்செல்வன் உள்ளிட்ட 9 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும், இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை அனலை தீவு அருகே சிறைபிடித்துச் சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காரை நகர் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கை மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 9 மீனவர்களையும், இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி, 20 பேரையும் வரும் 20–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகின் உரிமையாளரும், மீனவருமான வளர்ச்செல்வனின் சகோதரி வான்மதிக்கு வரும் 21–ந்தேதி நாகை மாவட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளநிலையில், அவர் உள்ளிட்ட 9 மீனவர்களுக்கு வரும் 20–ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், வளர்ச்செல்வன் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பதத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் சார்பாக தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்தஆலோ சனைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற மே மாதம் 16ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை நிறைவேற்ற இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் கேபிள் டி.வி தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்கள், கேபிள் டி.வி நிறுவனத்தினர் தேர்தல் தொடர்பான விளம்பரத்தை தயாரித்த பிறகு அந்த விளம்பரத்தை ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பித்து மாவட்ட தேர்தல் அலுவலரின் சான்று பெற்ற பிறகு ஒளிபரப்ப வேண்டும்.
அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப கொடுக்கும் கட்டணங்களை காசோலை அல்லது வரைவு காசோலையாக மட்டுமே பெற வேண்டும், எந்தவொரு விளம்பரமும் உரிய அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டால், அது ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரால் அதுகுறித்த விபரம் பெறப்பட்டு, அதனடிப்படையில் மாவட்ட தேர்தல் அலுவலரால் உடனடியாக சம்மந்தப்பட்ட கேபிள் டி.வி நிறுவனத்திற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் –(1951) 127–வது பிரிவின்படி நோட்டிஸ் அனுப்பப்படும். பின்னர் அந்த நிர்வனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீரனூர்:
தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியாக மத்திய அரசு தெரிவித்த நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நதிகள் இணைப்பு சங்க மாநில பொறுப்பாளர் ரவி தலைமையில், மாவட்ட செயலாளர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் சைவராஜ், மாவட்ட பொருளாளர் சார்லஸ், ஒன்றிய தலைவர் ஆறுமுகம் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் செல்லபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட 125 பேர் கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ரெயில் மறியல் செய்வதற்காக வந்தனர்.
தையடுத்து கீரனூர் ரெயில் நிலையத்திற்கு அருகே கீரனூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 125 பேரையும் கைது செய்தனர்.
விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் கணேஷ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 16.05.2016 அன்று நடை பெறுவதையொட்டி மாவட் டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில்ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி வட்டம், பட்டரைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தை துவக்கி வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதே போன்று கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாணவிகள் வாக்களித்ததையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் புதிய சாய்தள மேடை அமைக்கவும், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் சம்மந் தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தேர்தலின் போது அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணி மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாகனங்களை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் குறித்து தேர்தல் ஆணையத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
சட்டமன்ற தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருமயத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மாணிக்கம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்த முயன்றனர். இதற்கு காரில் வந்த 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பு குழு அலுவலர் மாணிக்கத்தை அவதூறாக பேசினாராம்.
இது குறித்து அதிகாரி மாணிக்கம், திருமயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 4பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி அதிகாரி மாணிக்கத்திடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளார். அதன்பிறகு இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.






