என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை டாஸ்மாக் பாரில் பதுக்கிய 100 மதுபாட்டில்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி
    X

    புதுக்கோட்டை டாஸ்மாக் பாரில் பதுக்கிய 100 மதுபாட்டில்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

    டாஸ்மாக் பாரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கிய 100 மதுபாட்டில்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 பறக்கும்படையினர் மற்றும் 18 நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொகுதி பறக்கும் படை தாசில்தார் நாகராஜ் தலைமையில் பறக்கும்படையினர் அங்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். அதில் அந்த பாரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு அங்கிருந்த ஊழியர் பாஸ்கரை கைது செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளிலும் சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை தாசில்தார் நாகராஜ் புகார் மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×