என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம்
    X

    புதுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம்

    புதுக்கோட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஜமாத் கூட்டமைப்பு தலைவர் லியாக்கத் அலி தலைமை தாங்கினார். செயலாளர் நூர்முகமது முன்னிலை வகித்தார்.

    மருத்துவ முகாமில் ரத்தத்தில் சக்கரை அளவு, எழும்பின் உறுதி தன்மை, நுரையிரல் செயல்திறன் என்பது உள்பட பல்வேறு பரிசோதனைகளும், உடற்பயிற்சி ஆலோசனை உள்பட பல்வேறு மருத்துவ ஆலாசனைகள் வழங்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றனர். இதில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×