என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டை அருகே அரிசி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் நடவடிக்கை
    X

    கந்தர்வக்கோட்டை அருகே அரிசி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் நடவடிக்கை

    கந்தர்வக்கோட்டை அருகே வாகன சோதனையில் அரிசி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை தாசில்தாரும், தேர்தல் துணை அதிகாரியுமான சாலை தவவளன், பறக்கும் படை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் மங்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் பெரம்பலூர் பெருமாள்கோவில் வீதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 42) என்பதும் அரிசி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அரிசி வாங்குவதற்காக அவர் பட்டுக்கோட்டை உதய சூரியபுரத்திற்கு லோடு ஆட்டோவில் சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர் ரூ.3 லட்சம் பணம் வைத்திருந்தார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கந்தவர்க்கோட்டை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×