என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் அதிகாரியை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
    X

    தேர்தல் அதிகாரியை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

    புதுக்கோட்டை அருகே தேர்தல் அதிகாரியை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    சட்டமன்ற தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று திருமயத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மாணிக்கம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்த முயன்றனர். இதற்கு காரில் வந்த 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பு குழு அலுவலர் மாணிக்கத்தை அவதூறாக பேசினாராம்.

    இது குறித்து அதிகாரி மாணிக்கம், திருமயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 4பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி அதிகாரி மாணிக்கத்திடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளார். அதன்பிறகு இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×