என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே என்ஜின் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்
    X

    புதுக்கோட்டை அருகே என்ஜின் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்

    புதுக்கோட்டை அருகே என்ஜின் கோளாறு காரணமாக பயணிகள் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மாலை வழக்கம்போல் 6.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. கீரனூர் அருகே சென்ற போது ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடி யாக ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் மாற்று என்ஜின் கொண்டு வரமுடியாததால் தொடர்ந்து ரெயிலை மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கி புதுக்கோட் டைக்கு கொண்டு சென்றார்.

    இதனால் வழக்கமாக புதுக்கோட்டைக்கு இரவு 7.40–க்கு சென்றடைய வேண்டிய பயணிகள் ரெயில் இரவு 8.40 மணிக்கு சென்றது. அங்கு பழுதான ரெயில் என்ஜினை சரி செய்யும் வகையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரெயில் என்ஜின் பழுது சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10.45 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த தாமதம் காரணமாக ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×