என் மலர்
நீங்கள் தேடியது "STUDENT SUICIDE பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை"
பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் உதயவேந்தன் (வயது 16), இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உதயவேந்தனை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உதயவேந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து வந்த தகவலின்பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






